Load Image
Advertisement

மாலத்தீவில் தீ விபத்து: தமிழர்கள் உள்பட 12 பேர் பலி

Tamil News
ADVERTISEMENT
மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேயில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமிழர்கள் எனக் கூறப்படுகிறது.


மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று (நவ.,10) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் சிலர் தீ விபத்தில் சிக்கினர். இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளது' என்றார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், மற்றவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது.

Latest Tamil News
மேலும், உயிரிழந்தவர்கள் அண்டை நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும் கூறினார். மாலத்தீவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில், ‛தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக' கூறப்பட்டது. ஆனால், அவர்கள் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலர் தமிழர்கள் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (5)

  • Anand - chennai,இந்தியா

    ஆழ்ந்த இரங்கல்கள்....

  • nallavan - manigramam,பஹ்ரைன்

    அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ஆண்டவனே அவர்களின் குடும்பத்தாரை காப்பாற்றுவாயாக

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    நல்ல வேளையாக இங்கிருந்து சுற்றுலா போகும் பிகினி அழகிகளுக்கு ஒன்றும் ஆகவில்லை.

  • raja - Cotonou,பெனின்

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இருந்தாலும் விடியல் அரசு பேருந்தை மாலதீவுக்கு விட்டு காப்பாற்றி இருக்கவேண்டும் என்ற கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement