Load Image
Advertisement

தொலைபேசி ஒட்டுக்கேட்பு தெலுங்கானா கவர்னர் புகார்

 தொலைபேசி ஒட்டுக்கேட்பு தெலுங்கானா கவர்னர் புகார்
ADVERTISEMENT
ஹைதராபாத் :''என் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக்கேட்படுவதாக சந்தேகம் உள்ளது,'' என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை கூறினார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை கவர்னர் பதவி வகிக்கிறார். ஆனால், ஆளும் கட்சியினர், கவர்னருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.கவர்னரின் எந்த செயல்பாட்டுக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
Latest Tamil News
பல விஷயங்களில் நேரிடையாகவே கவர்னரை, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கின்றனர். கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் நடத்தியுள்ளனர். ஆளும் கட்சியின் போக்கு குறித்து கவர்னர் தமிழிசை
ஏற்கனவே புகார் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில், ஹைதராபாதில் கவர்னர் தமிழிசை நேற்று கூறியதாவது:என் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்னுடைய போன் உரையாடல்கள் எங்கிருந்தோ பதிவு செய்யப்படுகின்றன. தெலுங்கானா மாநிலத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது. கவர்னர் பதவிக்கு எந்த மரியாதையும் தருவதில்லை. ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்குடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (6)

  • rajabrabu ayyavu -

    சார் ஒரே ஒரு கேள்விக்கு பதில் குடுங்க... ரெண்டு மாநிலத்துக்கு ஒரே கவர்னர்? எதுக்காக? பிஜேபி யில ஆட்களே இல்லையா இத்தனை மாநிலங்களை ஆளுதே எந்த மாநிலத்திலும் சிறந்த அறிவான அரசியல் சார்ந்த ஆட்களே பிஜேபி யில் இல்லையா? இல்லையென்றால் எத்தனையோ சிறந்த மனிதர்கள் இருக்கிறார்களே இந்தியாவில் அவர்களை ஒரு மாநில கவர்னராக ஆக்க கூடாதா? நாட்கள் இந்தியாவை தூக்கி நிப்பாட்டுவோம் என்று கூறிக்கொள்ளும் கட்சியில் ஆட்களே இல்லையா ? எதற்காக இரண்டு மாநிலத்துக்கு ஒரே கவர்னர்...

  • venugopal s -

    பொதுவாக இந்த ஒட்டுக் கேட்கும் வேலையை மத்திய அரசு தானே செய்யும்! ஆளுநர் மத்திய அரசையே குறை கூறுகிறாரா?

  • அப்புசாமி -

    ஏதோ ஒரு ஒட்டு கேக்கும் செயலியைஉங்க போனில் உங்க ஆளுங்களே பதிவிறக்கி இருப்பாங்க மேடம். பேசாம கட்டை ஃபோனுக்கு மாறிடுங்க.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    (ஆளும் கட்சியை சேர்ந்த) உங்களுக்கே இந்த நிலைமையின்னா, மற்றவர்கள் கதி?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டிய ஆட்சியை நான் டிஸ்மிஸ் செய்யமாட்டேன் என்று அடம்பிடிப்பது ஆபத்தான அணுகுமுறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement