Load Image
Advertisement

சிறு, குறு நிறுவனங்களுக்கு 10% மின் கட்டணம் குறைப்பு




சென்னை: சிறு, குறு நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25% யிலிருந்து 15% சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Latest Tamil News


இது தொடர்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த செப்.,10ம் தேதி முதல் நடை முறைப்படுத்தப்பட்டது.


தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், மிண்கட்டணத்தை குறைக்கும் படி, பல்வேறு சிறு, குறு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Latest Tamil News

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று, குறைந்தழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25% யிலிருந்து 15% சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.


இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (6)

  • chennai sivakumar - chennai,இந்தியா

    ஏற்கனவே தொழிலாளர் சம்பளம் எகிறி இருக்கிறது. இது யானை பசிக்கு சோள பொரி என்றுதான் கொள்ள வேண்டும்

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    தொழிற்சாலைகள் காற்றாலை மூலம் மின்சாரம் பெரும் திட்டங்களில் முதலீடு செய்து பலன் பெற வேண்டும் .

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    Not for shops and offices.

  • Venkatesh -

    0 ........

  • Raa - Chennai,இந்தியா

    சலுகைகள் என்பது எந்த ரூறுப்பதில் வந்தாலும், ஏமாற்றவே வழிவகை செய்யும். மச்சு வீடு கட்டி, மேலே ஓலை கூறை போட்டு இலவச மின்சாரம் வாங்கும் சமூகம் இது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement