Load Image
Advertisement

கைது செய்த என் மீதே குற்றம் சாட்டுகின்றனர்: பொன்.மாணிக்கவேல் வேதனை

 கைது செய்த என் மீதே குற்றம் சாட்டுகின்றனர்: பொன்.மாணிக்கவேல் வேதனை
ADVERTISEMENT
சென்னை: '58 ஆண்டுகளாக யாரும் கைது செய்யாத சிலை கடத்தலில் ஈடுபட்ட தீனதயாளனை முதன்முதலாக நான் தான் கைது செய்தேன். ஆனால், நான் அவரை தப்பிக்க விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்' என தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மீது அதே பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காதர் பாட்ஷா புகார் அளித்தார். அதில், 'சிலை கடத்தல் குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்க அவருடன் கூட்டு சேர்ந்து பொன்.மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடும்படியும்' குறிப்பிட்டு நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.


இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. இதையடுத்து சிலை கடத்தல் வழக்கை சிபிஐ மறு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, நேற்று விசாரணையை துவக்கியது. இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வழக்கின் முக்கிய ஆவணங்களை சிபிஐ.,யிடம் அளிக்க தயார். குற்றவாளிகள் பட்டியலில் தனது பெயர் இல்லை.

Latest Tamil News
58 ஆண்டுகளாக யாரும் கைது செய்யாத குற்றவாளி தீனதயாளனை நான் தான் முதன்முதலாக கைது செய்தேன். ஆனால், அவரை நான் தப்பிக்க விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்? 1983ல் இருந்து காவல்துறையில் வேலை பார்க்கிறேன். இதுவரை 831 சிலைகளை எனது குழுவுடன் கைப்பற்றியுள்ளேன். 2012ல் விசாரணை ஆரம்பித்து 2016ல் அவரை (தீனதயாளன்) கைது செய்துள்ளேன். எனக்கு வெகுமதி எதுவும் வேண்டாம்; என் மீதான கேவலமான இந்த குற்றச்சாட்டை விடுங்கள்.

Latest Tamil News
நான் ஓய்வுபெற்று இரண்டே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரையில் யாரும் இன்னும் ஒரு குற்றப்பத்திரிகை கூட பதிவு செய்யவில்லை. கடத்தப்பட்ட பொருட்கள் குற்றவாளி வீட்டில் இன்னும் அப்படியே இருக்கிறது. 2006 முதல் 2016 வரை தமிழகத்தில் நிகழ்ந்த சுமார் 18 ஆயிரம் கொலைகளுக்கு ஒரு சாட்சியங்கள் கூட இல்லை. ஆனால், நாங்கள் 30 சிலை கடத்தல் வழக்கில் 9 சாட்சியங்களை எடுத்துள்ளோம். போலீசை குறை சொல்லவில்லை. இதில் இருந்து உயரதிகாரிகள் விழித்து எழ வேண்டும்.

Latest Tamil News
குற்றவாளிகளிடம் பழகி மூளைசலவை செய்து அவர்கள் மூலம் தகவல்களை பெற்று பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டுள்ளோம். என் வாழ்க்கையின் கடைசி வரை குற்றவாளிகளை துரத்திக்கொண்டே தான் இருப்பேன். எதிர்கால சந்ததியினருக்கு நல்ல பொக்கிஷத்தை விட்டுச்செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (37)

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

    நீ நல்ல மனுஷன்யா நீயும் உன் சந்ததியும் நல்ல இருப்பீர்கள்

  • thangam - bangalore,இந்தியா

    திராவிட குடும்பங்கள் அனைத்தும் மண்ணாக போட்டும். ஷிவா அருள் புரி அய்யா.

  • Rajesh - Ontario,கனடா

    இவரை செயல்படவிடாமல் தடுத்தது எடப்பாடி திராவிட ஆட்சியில் தான் ... இரண்டு திராவிட கட்சியும் திருடர்கள் தான்

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    இவர் சேலத்துக்கு சார்ஜ் எடுக்க வந்திறங்கிய விதமே அலாதியானது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாவற்றிலும் நேர்மை ஊறிய ஆஃபீசர். த்ராவிஷர்களின் முதல் விரோதி. பழனி முருகன் காப்பாற்றுவான்.

  • katharika viyabari - coimbatore,இந்தியா

    இந்துக்களின் உண்டியல் பணம் வேண்டும், இந்து சாமிசிலை வேண்டும், இந்துக்களின் வாக்கு வேண்டும். அனால் அவர்களை கேவலகமாக திட்டலாம், ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement