மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோயில்களில் நாகரிகமான உடைகளை அணிவது அவசியம். டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் என்ன சத்திரமா?
திருப்பதி கோயிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழகத்தில் சாமி சிலை முன் செல்பி எடுக்கப்படுகிறது. இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
வாசகர் கருத்து (4)
அலைபேசிக்கு தடை விதித்தது சரி....... திருப்பதியில் இருப்பது போல பக்தர்களிடம் இருந்து சுவாமி தரிசனத்திற்கு முன்பு அலைபேசியை வாங்கி பின்பு அதை முறையாக திருப்பி கொடுக்க இங்கு என்ன வசதி செய்து உள்ளார்கள்... தமிழகத்தில் உள்ள பெரிய பெரிய கோயில்களில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வந்து செல்லும் பக்தர்களுக்கு முறையான கழிப்பிட வசதி கூட இல்லை.... அந்தந்த கோயில்களில் வருமானத்தில் அதை சிறப்பாக செய்யலாம்.....அதற்க்கு முறையாக கட்டணம் வசூலித்தால் அந்த ஒப்பந்தம் எடுப்பவர் முறையாக பராமரிப்பார். உதாரணம்: சபரி மலை ஐயப்பன் கோயிலில் இந்த வசதி மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. நன்றி
இதுவே சென்னைக்கு சென்றிருந்தால் வேருமாதிரியான தீர்ப்பு வந்திருக்கும்! கண்ணகி வாழ்ந்த ஊரில் நீதி இப்போதும் நிலைநாட்டப்படுவது அருமை! மாத்திரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஒவ்வொன்றும் அதன் மணிமகுடத்தில் பதிக்கப்படும் நவரத்தினங்கள்!
கோவிலுக்கு வரும் அனைவரும் வேட்டி அணிந்துதான் வரவேண்டும். நீதிமன்ற நீதிபதிகளும் வேட்டி அணிந்துதான் கோர்ட்டுக்கு வரவேண்டும். வேட்டிதான் நமது அடையாளம்.