சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.

சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில், ஆண்கள் - 3,03,95,103 பேர்
பெண்கள் - 3,14,23,321 பேர்
3ம் பாலினத்தவர்கள் 7,758 பேர்
இறந்த வாக்காளர்கள் 2.44 லட்சம் பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 15.25 லட்சம் பேர் என மொத்தம் 17.69 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.66 லட்சம் வாக்காளர்களும், குறைவாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு முகாம்
இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.இம்மாதம் 12, 13, 26, 27ம் தேதிகளில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும்.
இம்முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடக்கும்.இம்முறை 17 வயதான இளைஞர்களும் இளம்பெண்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு 18 வயதானதும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
வாசகர் கருத்து (5)
இவருக்கு வருடம் பூரா என்ன வேலை இருக்கு? தனியார் கம்பெனியில் அடிஷனல் பொறுப்பு கொடுத்து வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வைப்பார்கள். அரசு ஆப்பீஸில் மக்கள் வரிப்பணம் சூறை வீசப்படுகிறது.
என்னே ஒரு அறிய கண்டுபிடிப்பு. இந்தியா எங்குமே இதே நிலைதான். பெண் வாக்காளர்கள் அதிகம் . நல்ல திமுக ஆதரவு தேர்தல் ஆணையர்
எனவே முதல்வர் பதவி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பெண்களுக்கு அளிக்கப்பட🤔 வேண்டும். இப்படிக்கு பெண்ணுரிமை பேசிய ஈவேரா.
பெண் வாக்காளர்களால் திராவிடிய பசங்களுக்கு அசைக்க முடியாத ஆப்பா?
அதனாலதான் பஸ்ஸுல இலவச பயணத்துக்கு வழி செஞ்சி ஊர் சுத்த வெச்சோம் .....