உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் இன்று(நவ.,09) பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று(நவ.,09) ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதியாக சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லலித் நேற்று(நவ.,08) ஓய்வுபெற்றார். இவர், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை கடந்த மாதம் 11ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று(நவ.,09) ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்வில், தலைமை நீதிபதியாக சந்திரசூட்டுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார்.
வரலாறு
1959ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தவரான சந்திரசூட், கடந்த 2016-ம் ஆண்டு மே13ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இன்று(நவ.,09) பதவியேற்ற அவர், வரும் 2024ம் ஆண்டு நவ., 10ம் தேதி வரை அப்பொறுப்பில் இருப்பார்.
வாசகர் கருத்து (3)
அடுத்த தலைமை நீதிபதி ஆகப் போகும் நீதிபதியும் 🤔ஒரு வாரிசு தான். வாரிசுஅரசியல் ஒழிப்பைப்பற்றி அடிக்கடி பேசும் தலைவர்கள் சிந்திக்க. ஜாக்கிரதை.
பரம்பரை நீதிபதி? எப்பொழுது திறமை அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடக்கிறதோ அப்போது தான் நமது நாட்டில் ஊழல் குறையும் - சைனி போன்று சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கும் நீதிபதிகள் அதிகம் உள்ளார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இது தற்செயலாக நடந்த சம்பவம் தமிழ்நாட்டைப்போன்று பரம்பரை என்று கூறுவது தவறு தவறு