ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 12ல் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அதனால், அக்கட்சி பங்கேற்குமா அல்லது புறக்கணிக்குமா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில், பா.ஜ., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. எனவே, முதல்வர் ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டத்தில், பா.ஜ., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது என கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (19)
பொருளாதார நிலை உயர்ந்தால் தனி மனிதன் முன்னேறுவான். அவனை சார்ந்துள்ள அவன் குடும்பம் முன்னேறும். இதே விதி நாம் சார்ந்துள்ள இந்த சமூகத்துக்கும் பொருந்தும். பணம் படைத்தவன் என்ன சொன்னாலும் அவனை சுற்றி இருக்கும் கூட்டமும் அவனிடம் உள்ள பணத்துக்காகவும் அவன் சொன்னால் கேட்கும் கூட்டத்தின் வோட்டுவங்கிக்காகவும் இந்த அரசியல்வாதிகளும் கேட்கிறார்கள் என்றால் பொருளாதாரம் அளவுகோல் இல்லை என்று சொல்ல முடியுமா ?? இந்த அரசாங்கமும் மக்களுக்கு வழங்கும் மானியங்கள் , உதவித்தொகை, தள்ளுபடி, கருணைத்தொகை, உதவித்தொகை இப்படி சமூக அக்கறை கொண்டு நடத்தும் பல பெருவாரியான திட்டங்களுக்கும் அளவுகோலை வைக்கும்போது வருட வருமானம், மாத வருமானம் குடும்ப வருமானம் என்றுதானே சொல்கிறது?? அப்படி என்றால் இடஒதுக்கீட்டு என்று வரும்போது வெறும் ஜாதியை மட்டும் பார்ப்பதென்ன ? கல்வி, வேலை, சமூக அந்தஸ்து என்று நல்ல நிலையில் இருக்கும் வசதியான பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் சலுகைகளை அனுபவிப்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்காதா ?? பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட , பட்டியலின மக்களின் குடும்பங்களுக்கு அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றுதானே அர்த்தமாகிறது. இதை பற்றி எந்த அரசியல் கட்சிகளும் ஏன் விவாதிப்பதில்லை ? அரசாங்கத்திடம் இதுசம்பந்தமாக புள்ளிவிவரங்களை வெளியிட சொல்லி ஏன் கேட்பதில்லை. ?? உயர்கல்விக்கான அட்மிஷன், அரசாங்க வேலை போன்ற விஷயங்களில் நடந்த பல்வேறு வழக்குகளில் கூட நீதிமன்றங்கள் அரசாங்கத்துக்கு ஏன் இதை ஒரு ஆலோசனையாக அல்லது ஒரு உத்தரவாக அந்த அந்த காலகட்டத்தில் வழங்கவில்லை ?
ஆக தி மு க அணைத்து மதத்தினருக்கும் மற்றும் அனைவருக்குமான ஆட்சி என சொன்னது என்ன ஆச்சு? ஏன் மேல் ஜாதியினருக்கு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு செய்வதில் என்ன பிரச்னை இருக்கு? ஒரு மனிதன் ஒரு ஜாதில பிறந்தான் என்பதற்க்காக அவன் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை அவனுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் தப்பு என வாதாடுவது என்ன நியாயம் ? ஆகா இவர்கள் சொல்லுவதுதான் சமூகநீதியா ? இவர்கள் சொல்லுவதுதான் சட்டமா? மக்கள் தான் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
விடியலுக்கு மூக்கு உடைபடுமா? அல்லது அழகிரி வகையறாக்கள் ஜால்றா தட்டுவார்களா? சோதியக்கா உடனே டீவ்ட்டரில் இதற்கு ஆதரவு
இந்த திராவிட மாடல் திருட்டு பித்தலாட்ட ஃப்ராட் பொருக்கி அயோக்ய ரௌடி கொள்ளைக்கார கும்பலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.... திராவிட மாடல் திருடர்கள் மஹா பாபிகள்
ஒரே சாதியாக இருந்தாலும் பணக்காரன் பணக்காரனுடன் மட்டுமே திருமண சம்பந்தம் செய்து கொள்கிறான். ஏழை மற்றொரு ஏழைக்குடும்பத்துடன்தான் சம்பந்தம் பேச முடிகிறது. இது மட்டும் சமுதாய படிநிலை இல்லையா? ஒதுக்குதல்😪 இல்லையா? சமூகநீதியா ?அப்போ இங்கு பணம்தான் பிரதானம். எனவே ஏழ்மைநிலைதான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.