ADVERTISEMENT
சென்னை: விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்துள்ள நிலையில், பாலை நெய்யாக்கி, பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்ய, ஆவின் முடிவு செய்துள்ளது.
ஆவின் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்ச், பச்சை, நீலம் ஆகிய வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்ச் பாக்கெட்டில் அடைக்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை, 500 மி.லி., 24 ரூபாயில் இருந்து சமீபத்தில் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிவப்பு நிற பால் பாக்கெட் 30 ரூபாயில் இருந்து 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, லிட்டருக்கு 12 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால், ஆவின் பால் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. விலை அதிகரிக்கப்பட்டுள்ள ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட்டை தவிர்த்து விட்டு, தனியார் நிறுவன பாலை, பொது மக்கள் வாங்க துவங்கியுள்ளனர்.

இதையடுத்து, விற்பனையின்றி தேங்கும் பாலில் இருந்து, பால் பவுடர் மற்றும் வெண்ணெய் தயாரிப்பு பணிகளை, ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது. ரேஷன் கடைகளில் நடப்பாண்டு வழங்கபட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், 100 மி.லி., நெய் பாட்டில் இடம்பெற்று இருந்தது. இதன் வாயிலாக ஆவின் நிறுவனத்திற்கு, 120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை, டிசம்பர் மாத இறுதியில் வழங்க, அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, விற்பனையின்றி தேங்கும் பாலில் இருந்து வெண்ணையை தயாரித்து, நெய் உருக்குவதற்கான ஏற்பாடுகளை, ஆவின் நிறுவனம் துவங்கியுள்ளது. இதனால் விற்பனையின்றி தேங்கும் பாலால், ஆவின் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேநேரத்தில், ஆவின் பால் விற்பனையின்றி தேங்குவதால், ஏஜன்ட்கள், பாலகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (16)
பாலு போயி நெய்யாகும் டும் டும் டும் நெய்யிபோயி பலகாரமாகும் டும் டும் டும் பலகாரம் கெட்டுபோனதா சொல்லி எங்கே போகும் டும் டும் டும்
சுவீட் எடு இழுத்து மூடு.
ராஜேந்திரபால் ஒரு வருஷம்தான் ஸ்வீட் சாப்பிட்டாரு, நீங்க 5 வருஷமும் சாப்பிடுங்க.
நெய்யும் போனி ஆவாது.ஸ்வீட் செஞ்சி எம்எல்ஏ, மந்திரி,அரசு அதிகாரர்கள் வீட்டுக்கு அனுப்புங்க. அவங்களுக்குதான் வாங்கும் சக்தி இருக்கு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பொங்கலுக்கு அப்புறம் தயாராகும் நெய்யை என்ன செய்வீங்க? ?