ADVERTISEMENT
பாரத்பூர் : ராஜஸ்தானில், மாணவியை காதலித்து வந்த பள்ளி ஆசிரியை, அறுவை சிகிச்சை வாயிலாக ஆணாக மாறி, சமீபத்தில் அந்த மாணவியை கரம் பிடித்தார்.
ராஜஸ்தானில், பாரத்பூரில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக மீரா குந்தல் வேலை பார்த்து வந்தார். உடற்கல்வி வகுப்பின்போது கல்பனா பவுஸ்தார் என்ற மாணவியை சந்தித்த ஆசிரியை மீரா, அவர் மீது காதலில் விழுந்துள்ளார்.
கபடி வீராங்கனையான கல்பனாவும், மீராவை காதலித்தார். கடந்த ஜனவரியில் சர்வதேச கபடி போட்டிக்காக துபாய்க்கு சென்றார், மாணவி கல்பனா. அப்போது, அவர்கள் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை வாயிலாக ஆணாக மாறிய மீரா, தன் பெயரை ஆரவ் என மாற்றிக் கொண்டு, சமீபத்தில் அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் கடந்த 6ம் தேதி நடந்தது. இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான திருமணம், நம் நாட்டில் மிக அபூர்வம் என்றாலும், இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் கோலாகலமாக நடந்தது.
இது குறித்து ஆரவ் என்ற மீரா கூறியதாவது: பள்ளி விளையாட்டு மைதானத்தில் கல்பனா உடன் உரையாடியபோது, அவர் மீது காதல் வயப்பட்டேன். நான் பெண்ணாக பிறந்தாலும், எப்போதும் ஆணாகவே இருக்க ஆசைப்பட்டேன்.
அதேபோல், அறுவைச் சிகிச்சை வாயிலாக ஆணாக மாறவும் விரும்பினேன். அதன்படி, 2019ல் முதல்முறையாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். எங்களது காதல் வாழ்க்கை அருமையாகச் சென்றது. இவ்வாறு அவர் கூறினார்.
கல்பனா கூறுகையில், ''நானும், ஆசிரியை மீராவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தேன். அவர், ஆணாக மாற அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டாலும், அவரைத் தான் திருமணம் செய்து இருப்பேன்,'' என்றார். ஆசிரியை மற்றும் மாணவியின் வயது விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

வாசகர் கருத்து (3)
வாழ்க்கையின் இறுதிவரை இருவரும் இணைபிரியாமல் ஆரோக்யமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்