Load Image
Advertisement

தமிழகம் முழுவதும் போலி கூட்டுறவு வங்கி நடத்திய கும்பல் கைது

 தமிழகம் முழுவதும் போலி கூட்டுறவு வங்கி நடத்திய கும்பல் கைது
ADVERTISEMENT
சென்னை: சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 'ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட்' என்ற பெயரில் போலி வங்கி நடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைபர் குற்றங்கள் குறித்த 'முத்துவும் முப்பது திருடர்களும்' என்ற விழிப்புணர்வு புத்தகத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டார். சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.


தொடர்ந்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வருட காலமாக சென்னை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல் என 9 இடங்களில் போலியான 'ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட்' என்ற பெயரில் போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை போலீசார் பிடித்துள்ளனர்.

Latest Tamil News
கடந்த ஒரு ஆண்டாக இந்த வங்கி மூலம் ஏடிஎம் கார்டுகள் கொடுக்கப்பட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளராக சேர்க்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.70 லட்சம் வரை பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்துள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு மதுரை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இந்த வங்கி அனுமதியின்றி இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News
ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலியான வங்கியை நடத்துவது பற்றி தெரிந்தது. போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளோம். தனியார் வங்கியின் டெபிட் கார்டை வாங்கி, போலியான வங்கியின் டெபிட் கார்டாக கொடுத்துள்ளனர். ரூ.56 லட்சம் பணத்தை முடக்கி உள்ளோம். இது தொடர்பாக இதுவரை 46 பேரை கைது செய்துள்ளோம். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (23)

  • Raj S - North Carolina,யூ.எஸ்.ஏ

    பாவம் எத்தனை ஏழை மக்கள் ஏமார்ந்தார்களோ

  • thangam - bangalore,இந்தியா

    'முத்துவும் முப்பது திருடர்களும்' ... ஹ் ஹ் ஹா.. கருணாநிதி முழு பெயர் என்ன தெரியுமா? விக்கி போயி பார்த்துவிட்டு அப்புறம் நீங்களும் சிரியுங்கள்

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    போலி வங்கிகள்.. போலி அதிகாரிகள்... போலி டாக்டர் ...போலி நர்ஸ், போலி மருந்துகள், ... போலிகள் விஷயத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது....

  • GV.Kumar Singapore -

    முத்துவும் முப்பது திருடர்களும், முத்துங்கிர பேர் எங்கேயோ இடிக்குதே,

  • chennai sivakumar - chennai,இந்தியா

    இதிலும் தமிழகம் முதலிடம். நிச்சயமாக இதற்கு பின் ஒரு பெரிய கை இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement