ADVERTISEMENT
சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல்சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூன்று நீதிபதிகளும் எதிராக இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் நவ.,12 ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கும் எனவும், சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (19)
நேர விரயம்
எல்லா இட ஒதிக்கீட்டுகளுக்கும் இது போன்ற பொருளாதார நலிந்தோருக்கான ஐடா ஒதுக்கீடு வந்தால் சமூக முன்னேற்றம் ஏற்படும்.
சட்டசபையில் 10% இட ஒதுக்கீடு எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். அதை கவர்னரிடம் அனுப்புவார்கள். அந்த மசோதாவை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் துவங்குவார்கள். மக்களிடம் சென்று எங்களை கவர்னர் மற்றும் மத்திய அரசு பற்றி அவதூறு பரப்புவார்கள். இதுதானே திராவிட மாடல் அரசு. மக்களாகிய நாங்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். 2024 லில் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்
மெனு என்ன?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வெறும் அரசியல், மக்களுக்கு எதுவும் தெரியாமல் இன்னமும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறாரகள்.அப்படி முட்டாள்களாக இருக்கும் மக்களை மட்டுமே இவர்கள் வாக்கு வங்கியாக நினைக்கிறார்கள்.இதற்க்கு வாரி இறைக்கும் அந்நிய சக்தி பெரிய முட்டாள்.