அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து
புதுடில்லி: முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

95 வயதை தொடும் அத்வானி பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து இளம் வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவருமான அத்வானி, பா.ஜ.,வில் இணைந்து 1990 ல் ரதயாத்திரை நடத்தி நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.
வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது உள்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு இன்று பிறந்தநாள். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா; " நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த அத்தவானி அளப்பரிய முயற்சி எடுத்தவர். அரசில் இருந்த பொறுப்புகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். " நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அத்வானியே எனது அரசியல் வழிகாட்டியாகவும், எனக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி புகழ்ந்துள்ளார்.

இந்த நாட்டின் வளர்சிக்கு அரும்பாடு பட்டவர் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
பாஜகவில் அடல்ஜி போல திறமைவாய்ந்த பலம்மிக்க தலைவராக இருந்தவர் அத்வானிஜி. அவர்கள் இருவரும் போராடி வளர்த்தெடுத்த கட்சி
வாழ்த்துகள்
பிறந்தநாள் வாழ்த்துகள்
0000
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பாவம் அத்வானிஜி இப்படி ஓரம் கட்டிட்டாங்களே ஒரு ஆலோசனை கூட கேட்பதில்லை, வருடத்திற்கு ஒரு நாள், பிறந்த நாள், அன்றைக்கு எட்டி பார்ப்பதோடு சரி , நல்ல குரு பக்தி