Load Image
Advertisement

10% தீர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின் கருத்து

 10% தீர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு: முதல்வர் ஸ்டாலின் கருத்து
ADVERTISEMENT

சென்னை: ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது,


இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: இந்த தீர்ப்பு சமூக நீதி போராட்டத்துக்கு பின்னடைவு. சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கு ஒரு பின்னடைவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது.

Latest Tamil News
சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (122)

  • Nakkeeran - Hosur,இந்தியா

    இந்த விஷயத்தில் உடனடியாக களமிறங்கிய ஸ்டாலின் ஏன் NEET எதிர்ப்புக்காக உச்ச நீதி மன்றம் செல்லாமல் ஆளுநர், ஜனாதிபதி என்று அலைகிறீர்கள். பயமா இருக்கிறதா உங்களிடம் சரக்கு இல்லையா

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத... ஸ்டாலின்... முன்னேறிய வகுப்பினருக்கு எதிரா போராடுங்க. வேண்டாம்னு சொல்லலை. முன்னேறிய வகுப்பில் முன்னேறாமல் ஒரு நேர சோற்றுக்கே வழியில்லாமல் இருப்பார்களே அவர்களுக்கு எதிராக ....உள்ள சட்ட வல்லுநர்களை கண்டுபித்து போராடி தான் ஆக வேண்டும் என்கிறீர்களா?

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    இந்த இடவொதுக்கீட்டால் யாருக்கு பாதிப்பு என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்ப்போம் ......

  • sankar - Nellai,இந்தியா

    உங்கள் இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பு இல்லையே - பிறகு எதற்கு இந்த கூச்சல் - மக்களை பிளவு படுத்தி வைத்து இருந்தால்தான் ஒட்டு அறுவடை செய்யமுடியும் - கீழ்த்தரமான எண்ணங்களை எப்போது மாற்றுவீர்கள்

  • naadodi - Dallas,யூ.எஸ்.ஏ

    சாதிகளை உருவாக்கியது யாரோ? ஆனால் அதை நல்லா பேணிப் பாதுகாத்து கல்லா கட்றானுவ நம்ம அரசியல் வியாதிகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement