பா.ஜ.,வுக்கு போட்டி காங்., தான் ஆம் ஆத்மி இல்லை: ஆசாத் ஆருடம்

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நீண்ட காலமாக ஆட்சி நடத்தி வரும் பா.ஜ., இந்த தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க கங்கணம் கட்டி வருகிறது. ஆனால் அதற்கு போட்டியாக உள்ள காங்கிரஸ் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வாரத்திற்கு இரண்டு முறை என முறை வைத்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடும் போட்டியை தரும் வகையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த்கெஜ்ரிவால் தன் பங்கிற்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தற்போது மாநிலத்தில் எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபடாமல் மவுனம் காத்து வருகிறது.
மோடி, அமித்ஷா, கெஜ்ரிவால் ஆகியோர்களின் தீவிர பிரசாரத்தை வெளியிடும் அம்மாநில நாளிதழ்கள் காங்கிரசை கண்டுகொண்டதாக தெரியவில்லை, இதனால் மாநில தேர்தல் களத்தில் காங்கிரஸ் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மாநிலத்தில் இதுவரையில் சுற்றுப்பயணம் துவங்கவில்லை. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சுணக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆக.,26 ம் தேதி முதல் பிரிந்து சென்ற குலாம் நபி ஆசாத் குஜராத் தேர்தல் பிரசார நிலை குறித்து கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்ததற்கு கட்சியின் தலைமை காரணமே தவிர ஒரு போதும் அக்கட்சியி்ன் மதசார்பின்மை கொள்கையில் இருந்து விலகவில்லை. குஜராத், ஹிமாச்சல் மாநில தேர்தலில் பா.ஜ.,வுக்கு மாற்று கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். ஆம் ஆத்மி அல்ல . அவை டில்லி அரசியலோடு சரி.பஞ்சாப்பில் தற்போதை அரசியல் சூழ்நிலையில் அவை தோல்வி அடைந்துள்ளது. குஜராத்.ஹிமாச்சல் தேர்தல்களில் அவை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (3)
காஷ்மீர் ஆசாத் காங்கிரஸ் நு கட்சி ஆரம்பிச்சாரே... சரியா போகலியாக்கும்?
திரு.குலாம்நபி ஆசாத்தின் காங்கிரஸ் மீது அக்கறை. திண்ணையில் உட்கார்ந்து பேசி வீணடித்ததுபோல் நாட்டின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய காங்கிறஸ். நாட்டில் அகற்றப்படவேண்டிய கட்சியில் காங்கிரசும் ஒன்று. நாட்டு மக்களும், நாடும் இன்றுவரை சந்திக்கும் மூலகாரணமே சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் நலன்கருதி சரியான எதிர்காலத்திற்கான வளமான செயல்களை செயல்படுத்தாததே காரணம். திருமதி. இந்திராகாந்தி, திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் திறமை பாராட்டுக்குறியது. திரு.ராஜிவ் காந்தி திறமையானவர் சாதிக்ககூடியவர், ஆனால் சமாதான இந்தியாவின் படை இலங்கையில் சரியான நேர்மையான முறையில் சமாதானப்படைக்கு இந்திய அரசியல் தலைமை வழிகாட்டியிருந்தால் நாம் நம் தலைவரை இழக்காமலும் நம் நாடு மிக முன்னேற்றத்துடனும் தென்னிந்தியாவின் கடல் பிரதேசத்தில் இன்று மிக மிக மகிழ்ச்சியான தருணமாக நமக்கும் இலங்கைக்கும் உறுவாகியிருக்கும்.தலைமை எப்போதும் தீர்க்கதரிசியாக செயல்படவேண்டும் நாட்டின் நலன்கருதி.இது என்னுடைய கருத்து, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.
விசாரணை க்கு முன்பா பின்பா