எல்லை தாண்டி வீரத்தை காட்டாதீர்கள்: தமிழிசைக்கு தி.மு.க., எச்சரிக்கை
தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் உள்ள தமிழிசை, தமிழகத்தில் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

'மைக் மேனியா'
தமிழக கவர்னர் ரவிக்கும், தி.மு.க., அரசுக்கும் இடையேயான மோதல் காரணமாக, அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என, அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழிசை,தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஜனாதிபதியிடம் மனு அளிக்க இருப்பதை கண்டித்திருந்தார்.
சென்னையில் நடந்த விழாவில் பேசும்போது, 'யார் என்ன சொன்னாலும், தமிழகத்தில் நான் மூக்கை மட்டுமல்ல, தலையையும் நுழைப்பேன்' என்றார்.
இந்நிலையில்,தமிழிசையை கடுமையாக விமர்சித்து, தி.மு.க., நாளிதழில் நேற்று வெளியான கட்டுரை: பலருக்கு 'மைக் மேனியா' இன்னும் சிலருக்கு 'கேமரா மேனியா' என்பர். கேமராவில் முகத்தை காட்ட வேண்டும்; மைக்கில் பேச வேண்டும் எனும் மன வியாதி சிலருக்கு அதிகம் உண்டு.
அத்தகைய நிலைதமிழிசைக்கும் ஏற்பட்டுள்ளது. அவரை, கவர்னராக தெலுங்கானா அரசோ, மக்களோ மதிப்பதில்லை. அதனால், புதுச்சேரியில் தன் ஆட்சி அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.
புலம்பல்
தெலுங்கானாவில் வாயை திறக்க முடியவில்லை. கவர்னருக்குரிய மரியாதையை தெலுங்கானா அரசு தரவில்லை. கவர்னர் உரையாற்ற கூட அழைக்கவில்லை என, போகும் இடமெல்லாம் புலம்பி தீர்க்கிறார்.
தமிழிசையின் கதறலுக்கு மத்திய அரசு காது கொடுப்பதாக தெரியவில்லை. இதை அறியாமல், மத்திய அரசு தனக்கு பின்னால் இருப்பதாக கருதி, தமிழிசைபிதற்றுகிறார். தமிழகத்திற்கென கவர்னர் இருக்கும்போது, எல்லை தாண்டியும், எல்லை மீறியும் அடிக்கடி தமிழக விவகாரங்களில் தலையிடுகிறார்.
'வாரன்ட்' இன்றி ஆஜர்
இது, கவர்னர் ரவியை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்பதை எண்ணாமல், 'வாரன்ட்' இன்றி ஆஜராகி தன் அறியாமையை அவரே வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.
மைக்கும், கேமராவும் கிடைத்து விட்டால், 'இரும்புக்கரம், துரும்புக்கரம்' என, வீராவேசம் பேசுவதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமாக கவர்னர்கள் செயல்பட வேண்டும்.
உங்களது எல்லை தெலுங்கானா. அங்கு பட்ட அடிக்கு, தமிழகத்தில் தமிழிசை வீரத்தை காட்டக் கூடாது. அவரது கூற்றுபடி மூக்கை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (71)
தமிழகம் எங்கே பாகிஸ்தான்லயா இருக்கு? இல்ல ஆப்கானிஸ்தான்ல இருக்கா? எல்லை தாண்டுறதுக்கு.
ஒரு அரசு தவறு செய்யும் பட்சத்தில் அதை சுட்டிக்காட்டவே ஆளுநர் பதவி உள்ளது. தமிழக ஆளுநரும் தனது பங்கை சிறப்பாகவே செய்து வருகிறார். தமிழக ஆளுநரை சிறுமைப்படுத்தும் போக்கை கண்டித்தே தெலுங்கானா ஆளுநர் அறிக்கை விட்டிருக்கிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது? அடுத்த மாநிலத்தில் நடப்பதை பற்றி தமிழக காட்சிகள் கருத்த்து சொல்வதில்லையா? தமிழக முதல்வர் கேரளா செல்லவில்லையா? மம்தா இங்கு வந்து ஸ்டாலினை சந்திக்க வில்லையா? தெலுங்கானா ஆளுநராக இருந்தாலும், தமிழிசை பச்சை தமிழர், தனது உணர்வுகளை கொட்டுகிறார். அது ஏன் இவர்களுக்கு வலிக்கிறது?
Stalin will surrender to Tamizisai soon
அநாகரீக ரௌடி கூட்டம் ஒருஆளுனரிடம் எப்படி பேச வேண்டும் என்ற நாகரீகம் ஹெரியாத பரம்பரை.
இவனுங்க புலம்புவதில் இருந்தே நன்றாக தெரிகிறது எந்த அளவுக்கு இவர்கள் ஆடிப்போய் இருக்கிறார்கள் என்பது . இதனால் தால் தூக்கமே வருவதில்லையாம் அவர்ர்ர்ர்ர் அவருக்கு .