ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி-சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையின் மொத்த கொள்ளளவு 736.96 மில்லியன் கன அடி (36 அடி) ஆகும். கல்வராயன்மலைப் பகுதியில் பெய்யும் மழை, மணி மற்றும் முக்தா நதிகளின் மூலம் அணைக்கு வருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவில் 590 மில்லியன் கன அடி (34 அடி) மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து ஏற்படும் பட்சத்தில் மெயின் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மணிமுக்தா அணைக்கு நீர் வரத்து ஏற்பட்டது.
அணையில் தற்போது 590 மில்லியன் கன அடி (34 அடி) தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 3ம் தேதி வினாடிக்கு 200 கன அடியும், 4ம் தேதி வினாடிக்கு 1000 கன அடியும், நேற்று வினாடிக்கு 700 கன அடி நீரும் புதிய ஷெட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதால் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடியது.
மணிமுக்தா அணை தண்ணீரால் புதிய மற்றும் பழைய பாசனத்தில் 17 கிராமங்களில் உள்ள 5,493 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும் பல்லகச்சேரி, பானையங்கால், கொங்கராயபாளையம், கூத்தக்குடி ஆகிய நான்கு அணைக்கட்டுகள் நிரம்பும்.
நேற்று முன்தினம் விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆறு, குளங்களின் கரையை பலப்படுத்தி வாய்க்கால்களை வருடா வருடம் சீர்செய்ததுபோல் கணக்குகாட்டாமல் நேர்மையான முறையில் மனிதாபிமானத்துடன் நீரும் விவசாயியும் எவ்வளவு முக்கியம் என்பதை மனதில்கொண்டு செயல்படுங்கள்,பொறுப்புள்ள மனிதர்களே. வந்தேமாதரம், ஜெய்ஹிந்த்.