Load Image
Advertisement

இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவர் காலமானார்

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில், இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயது முதியவர் உடல்நலக்குறைவால் காலமானார்.


Latest Tamil News


ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் நவ.,12ம் தேதி துவங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் டிச., 8ம் தேதி நடைபெறும்.


இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட 1.22 லட்சம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்துகின்றனர்.
100 வயது கடந்த 1,190 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான கின்னார் மாவட்டத்தில் வசிக்கும் 106 வயதுடைய ஷியாம் சரண் நெகி என்ற முதியவர் கடந்த நவ., 2ம் தேதி தனது தபால் வாக்கை அளித்தார். இந்நிலையில், இந்தியாவின் முதல் வாக்காளரான 106 வயதான ஷியாம் சரண் நேகி கல்பாவில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(நவ.,05) காலை காலமானார்.

Latest Tamil News

ஹிம்மாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல்: இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




தேர்தல் ஆணையம் இரங்கல்:







இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகியின் மறைவுக்கு தேர்தல் ஆணையம் இரங்கல் தெரிவிக்கிறது. இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர். தேசத்திற்கான அவரது சேவை அளவுக்கு அதிகமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (6)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இன்றைய காலகட்டத்தில் வாக்கு உரிமை உள்ளவர்கள், குறிப்பாக இளைஞர்கள், தேர்தல் அன்று வாக்கு அளிக்க விடுமுறை அறிவித்தவுடன் வாக்கு சாவடிக்கு செல்லாமல், ஜாலியாக பொழுதைபோக்க வெளியூர் செல்கின்ற அவலம். அவர்கள் இந்த மறைந்த பெரியவரிடமிருந்து பாடம் கற்கவேண்டும் வாக்காளர்களின் உரிமை என்னவென்று. மறைந்த பெரியவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    ஒட்டு போட்டு பாவத்தை ஆரம்பிச்சி வெச்சவர் இவர் தானா..

  • Dhandapani - Madurai,இந்தியா

    முதல் வாக்காளருக்கு இறுதி மரியாதை, அவரின் ஆன்ம சாந்தியடையட்டும் ,

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    அந்த தெய்விக ஆன்மா அமைதி பெறுக....அமைதி பெறுக

  • Saai Sundharamurthy AVK -

    ஆழ்ந்த வருத்தங்கள் !!!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement