ADVERTISEMENT
சென்னை: பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு, நமிதா உள்ளிட்டோர் குறித்து ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மற்றும் அவரது பேச்சை மேடையில் கண்டிக்காமல் கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த தி.மு.க., பொது கூட்டத்தில், அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர், பா.ஜ.,வில் உள்ள நடிகையர் குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து, தரக்குறைவாக ஆபாசமாக பேசினார்.
இந்த பொதுக்கூட்டம், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடந்தது. இதற்கு, பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க கோரி, தேசிய மகளிர் ஆணையத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. நடந்த சம்பவத்துக்கு தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், சைதை சாதிக் எதிராக குஷ்பு, இன்று (நவ.,4) டில்லியில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், சைதை சாதிக் பேச்சின் வீடியோ ஆதாரமும், அவர் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
புகார் மனு அளித்த பிறகு டில்லியில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாட்கள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.

எனக்கு விளம்பரம் தேவையில்லை. அவருக்கு தான் இப்போது விளம்பரம் தேவை. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இவ்வளவு அநாகரீகமாக பேசி உள்ளனர். அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அஐமச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார்.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்துவிட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை, நடவடிக்கை தான் தேவை. அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (26)
குஷ்பு புகார் அளிக்கவில்லையென்றாலும், நீதிமன்றம் தானாக முன் வந்து கைது பிறப்பிக்கலாமே? காவல்துறை தானாக முன் வந்து கைது செய்யலாமே? எது அதெல்லாம் திமுக வினருக்கு கடைபிடிக்க முடியாதா?
இந்த ஆணையம் தொழில் அதிபர்கள் மற்றும் உயர் மட்டத்தில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்க மட்டுமே உதவும். குருமாவிற்கு முன்பு பணம் பறிக்க உதவிய பி சி ஆர் சட்டம் போன்ற ஒரு அமைப்பு
திமுக என்றாலே அக்கிரமம், அட்டூழியம் என்று பொருள். திமுகவினர் என்றாலே குண்டர்கள், ஆபாச பேசசு பேசுபவர்கள் என்றும் ஒரு பரவலான கருத்து. அது அவர்கள் ரத்தத்தில் ஊறியுள்ளது. சரிபடுத்தமுடியாது.
மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாட்கள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதை கேட்டத... அதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.... எனக்கு விளம்பரம் தேவையில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அவர் வழி வந்த தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்...அப்படிதான் இருப்பார்கள்...