Load Image
Advertisement

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு உயர் நீதிமன்றம் அனுமதி

 ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு உயர் நீதிமன்றம் அனுமதி
ADVERTISEMENT
சென்னை:கோவை உட்பட ஆறு இடங்களை தவிர, 44 இடங்களில் நாளை ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விஜயதசமியை முன்னிட்டு, அக்., 2ல், 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனு கொடுத்தனர். போலீசார் நிராகரித்ததால், உயர் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டது.ஆனால், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு தடை; கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஆகியவற்றால், சட்டம்- ஒழுங்கு பிரச்னையை காட்டி, அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவ., 6ல் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார். Latest Tamil News


இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்,ஆர்.இளங்கோ, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஜி.ராஜகோபால், என்.எல்.ராஜா, வழக்கறிஞர் ரபு மனோகர் ஆகியோர் வாதாடினர்.இதையடுத்து, 'உளவுத் துறை அறிக்கையை ஆராய்ந்த பின், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்' என, நீதிபதி கூறியிருந்தார்.

அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உளவுத் துறை அறிக்கையை ஆய்வு செய்ததில், 2008 முதல் 2011ம் ஆண்டுகளில் பதிவான வழக்குகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; இதை ஏற்க முடியாது.அறிக்கையில், பதற்றம் நிறைந்த பகுதிகளாக, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய ஆறு நகரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளன.இவை தவிர, மற்ற இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி, அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும்.ஆறு இடங்களில் இயல்புநிலை திரும்பிய பின், அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, மனுதாரர்கள் காவல் துறையிடம் விண்ணப்பிக்கலாம். அதை பரிசீலித்து, சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

மைதானம் அல்லது அரங்கத்திற்குள் மட்டுமே பொதுக் கூட்டம், அணிவகுப்பு நடத்திக் கொள்ள வேண்டும். அணிவகுப்பில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழக் கூடாது.
அவ்வாறு நடந்தால், அதற்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும். தனி நபர், மதம், ஜாதி ஆகியவை குறித்து அவமதிக்கும் வகையில், பாடல் பாடவோ, பேசவோ கூடாது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது.இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு ஏற்படும் விதமாக செயல்படக் கூடாது. பொது மக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். காயத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் உடன் எடுத்த செல்லக் கூடாது. அவமதிப்பு வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (71)

 • மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா

  ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவர் கூடிய. மைதானத்தில் மட்டும் நடத்த அனுமதி பிரதான சாலை தெருக்களில் நடத்த அனுமதி இல்லை ~கோர்ட் ஹி ஹி ஹி

 • sankar - சென்னை,இந்தியா

  கூட்டத்துக்கு அதரவளிக்கும் அரசு டெல்லியில் நடக்கிறதே...

 • sankar - சென்னை,இந்தியா

  தமிழ் நாட்டில் பிஜேபீ ஆட்சி இல்லை, அதனால், காந்தியைக் கொன்ற இந்த அடாவடி கூட்டம் எப்படியும் அணிவகுப்பு என்ற பெயரில் தமிழக ஆட்சிக்கு கேடு விளைவிக்க வாய்ப்பு...

 • ஆரூர் ரங் -

  நாடு முழுவதும் சென்ற மாதம் இதே RSS பத சஞ்சலன் ஊர்வலம் நடத்தப்பட்டது. அங்கெல்லாம் எங்குமே நடக்காத வன்முறை சட்டம் ஒழுங்கு பிரச்சனை... இங்கு ஏற்படும் என்றால் அது இங்குள்ள கேவலமான கையாலாகாத அரசின் நிர்வாக லட்சணத்தைதானே காட்டுகிறது...

 • ஆரூர் ரங் -

  நாடு முழுவதும் சென்ற மாதம் இதே RSS பத சஞ்சலன் ஊர்வலம் நடத்தப்பட்டது. அங்கெல்லாம் எங்குமே நடக்காத வன்முறை சட்டம் ஒழுங்கு பிரச்சனை இங்கு ஏற்படும் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement