Load Image
Advertisement

மதுரை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம்!

சென்னை: தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சபை இணைந்து, 'பசுமை விமான நிலையம்: தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கான முயற்சி' என்ற கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

Latest Tamil News


தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில், 2.5 லட்சம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. நாட்டிலேயே, 9 சதவீதம் வளர்ச்சியுடன், தமிழகம் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது. மேலும், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு, 8.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்துள்ளோம். இதனால், ஏற்றுமதிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இதற்கு, புதிய விமான நிலையம் அமைய வேண்டும். அப்போது தான் பொருளாதார இலக்கை அடைய முடியும். சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விமான பழுது நீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் உட்பட, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது காலத்தின் கட்டாயம். அப்போது தான் நாம், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

Latest Tamil News

புதிய விமான நிலையம் அமையும் போது, அதனுடன் கோவை, திருச்சி, மதுரை மற்றும் துாத்துக்குடி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள், 85 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டாலும், பழைய விமான நிலையமும் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மாநில திட்டக் குழு உறுப்பினர் மல்லிகா சீனிவாசன் பேசுகையில், ''புதிய விமான நிலையம் அமைப்பது, மாநிலத்தின் மிக முக்கிய வளர்ச்சி திட்டங்களில் ஒன்று. இது, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றுக்கு முதுகெலும்பாக இருக்கும்,'' என்றார்.

Latest Tamil News

தொழில் துறை செயலர் கிருஷ்ணன் பேசுகையில், ''பழைய விமான நிலையத்திற்கும், புதிய விமான நிலையத்திற்கும் இடையே இணைப்பு போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் பேச்சு நடத்த உள்ளோம்,'' என்றார்.
தமிழக தொழில் வளர்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ முரளீதரன், சென்னை தொழில் வர்த்தக சபை தலைவர் கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (7)

  • Sathish - Coimbatore ,இந்தியா

    நகரின் உள்கட்டமைப்பை சீராக்குவதுதான் முதன்மையான பணி. இதை செய்துவிட்டு பின்னர் விமான நிலைய விரிவாக்கத்தை பற்றி பேச வேண்டும்.

  • அப்புசாமி -

    000

  • Ganapathy - chennai,இந்தியா

    பின்னாடியே வைக்கற சண்ட வேற இருக்கே.

  • sankaseshan - mumbai,இந்தியா

    பேச்சு பெருசா இருக்கு விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களை கையக படுத்தி கொடுங்கள் தாமதமானால் மத்திய அரசின் மீது பழி சொல்லக்கூடாது

  • duruvasar - indraprastham,இந்தியா

    சிலநாட்களுக்கு முன் தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி கூறியது இந்த வாயில் வடை சுடும் வித்தை இதுதான். கடந்த 10 வருடமாக 10 பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் போராட்டம், ஆர்பாட்டம் என அவியல் செய்து எந்த வளர்ச்சிப் பணியும் செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டு தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டு இன்று கீரீன்வேஸ்சாலை கில்லாடி கீரின்பீஃல்ட் விமானநிலையத்தைப்பற்றி பேசுகிறார். மக்களை முட்டாள்கள் என நினைக்கும் இந்த பகுத்தறிவுவாதிகள் வேடதாரிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement