ADVERTISEMENT
லக்னோ: உ.பி.யில் பலாத்கார வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக டி.எஸ்.பி. மீது ஆதாரத்துடன் எழுந்த புகாரில், அவரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவிட்டார்.
உத்தர பிரதேசத்தில் 2021-ம் ஆண்டு பெண் ஒருவர் ராம்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் தன்னை, சுவாமி விவேகானந்தா மருத்துவமனை உரிமையாளர் மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இது குறித்து ராம்பூர் மாவட்ட டி..எஸ்.பி.,யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா, வழக்குப்பதிந்து விசாரிக்காமல் இழுத்தடிப்பு செய்துள்ளார். பின்னர் இடமாறுதல் சென்றுவிட்டார்.
இந்த விவகாரம் தகவல் அறியும் .உரிமை சட்ட ஆர்வலர் மூலம் சமர்பித்த வீடியோ ஆதாரம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது. விசாரணையில் பலாத்கார குற்றவாளிகளிடம் டி.எஸ்.பி.,. ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்று வழக்கு பதியாமல் இருப்பது தெரியவந்தது. 2021 டிசம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
டி.எஸ்.பி. லஞ்சம் பெற்றது வீடியோ ஆதாரத்துடன் உறுதியானது. இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்.பி.யை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பு செய்த டி.எஸ்.பி. மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யுமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு சக போலீஸ் அதிகாரிகள் , கீழ்நிலை காவலர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வாசகர் கருத்து (52)
தமிழ்நாட்டுக்கும் இதுபோன்ற முதல்வர் அமைந்தால் நன்றாக இருக்கும்.
சபாஷ்... புகாரின் பேரிலேயே பதவி இறக்கம்.
இதெல்லாம் பாஜகவின் வெறும் அரசியல் நாடகம். கோர்ட்டுக்கு போனால் நிற்காது என்று தெரிந்தே ஆடும் நாடகம், போடும் வேஷம். மக்களிடம் நல்ல பெயர் வாங்குகிறாராம்!
யோகிக்கு பாராட்டுக்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகளை படத்தில் தான் பார்த்துள்ளோம். நல்லாட்சிக்கு மிகச் சிறந்த உதாரணம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நாடு திருந்துவது பிற மதத்தினருக்கு புடிக்காதே