ADVERTISEMENT
கோல்கட்டா : இரண்டு நாள் பயணமாக இன்று(நவ.,2) சென்னை வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்த போது, அரசியல் குறித்து பேசவில்லை என்றனர்.
மேற்கு வங்கத்தின் தற்காலிக கவர்னர் இல.கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். இன்று மாலை, தமிழக முதல்வர் ஸ்டாலினை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மம்தா சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, ஸ்டாலின் மனைவி துர்கா, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு, , இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, ஸ்டாலினுக்கு மம்தா நினைவு பரிசு வழங்கினார். மம்தாவுக்கு சாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செய்தார்.

இதன் பிறகு நிருபர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: தேர்தல், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் எனக்கூறினார்.
மம்தா கூறும்போது, ஸ்டாலின் எனது சகோதரரை போன்றவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள நான், ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும். இரண்டு கட்சி தலைவர்கள், அரசியலை தாண்டி வேறு விஷயங்கள் குறித்து பேசலாம். நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை எனக்கூறினார்.
வாசகர் கருத்து (48)
நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆங்கிலம் தெரியாமல் எப்படி மற்ற நாட்டுத் தலைவர்களிடம் பேசுகிறாரோ அதேபோல் இவர்களும் பேசியிருப்பார்கள்.பாஜகவினர் கவலைப்பட வேண்டாம்!
பெங்காலி ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருப்ப அங்க நண்பர்க்கு கொடுத்துட்டு போயிருக்காங்க. இவரும் வீட் நல்லா இனிக்கிது என்று சொல்லியிருப்பார். ஸ்வீட் பின்ன கசக்கவா செய்யும் என்று நினைத்து கொண்டு திரும்பியிருப்பார்.
அதுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது... இதுக்கு சுத்தமாக தமிழ் தெரியாது... ஆக ஆக....என்று ஓட்டவேண்டியதுதான்
துரைமுருகன் பக்கத்துல இருக்கும்போது எப்படி மனசு விட்டு பேசமுடியும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கிஞ்சித்தும் வெட்கமில்லாத கட்சி திமுக.