அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம் பேட்டி:
கடலுார் மாவட்டம், நெய்வேலியில், என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய, 21 கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே சுரங்கம், 1, 2 ஆகியவற்றுக்கு கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. தற்போது, மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.தமிழகத்தின் வளங்களை பயன்படுத்தும் என்.எல்.சி., நிர்வாகம், நிலம் வழங்கிய மக்களுக்கான உரிமையை பறித்துள்ளது.
இதெல்லாம் இன்று, நேற்று நடந்தது அல்ல... போன,10 வருஷமா ஆட்சியில இருந்த அ.தி.மு.க., அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், தமிழக கவர்னர் ரவி, பா.ஜ.,வினர் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. தவறான தகவலை தி.மு.க., ஆட்சிக்கு எதிராக கவர்னரே சொல்கிறார் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. அவர், கவர்னர் என்ற பதவியை மறந்து ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக செயல்படுகிறார்; அரசு விழாக்களில் அரசியல் பேசுகிறார்; ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார்; திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதுாறு பரப்புகிறார்.
உங்க குற்றச்சாட்டுகளை பார்க்கும் போது, கவர்னர் தன் கடமையை சரிவர ஆற்றுகிறார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
குஜராத் மாநிலம், மோர்பி நகரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில், 160-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும், பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு, 'புரோட்டோகால்'கள் உருவாக்கப்படுவதையும், அவை முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
நம்ம ஊர்லயும் இந்த மாதிரி நிறைய பாலங்கள் இருக்கு... குதிரை போன பின் லாயத்தை பூட்டும் கதையாக அல்லாமல், இப்போதே அரசு விழித்து கொள்வது நல்லது!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை:
ஹரியானாவில் நடந்த, மாநில உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 'நாடு முழுதும் காவல் துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இது, மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநில உரிமையை வலியுறுத்தும் மாநிலங்கள், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களையும் சேர்த்து தானே பிரதமர் சொல்றார்... அப்படியிருக்க இதில் மாநில உரிமைகள் பறிபோகுதுன்னு எப்படி சொல்றீங்க?
வாசகர் கருத்து (6)
மோடி என்னபேசினாலும் எதிர்க்கவேண்டும்.. புரியவில்லை என்றாலும்.. இதுதான் ..
முழு நேர அரசியல் வாதிகளாக மாறிவிட்டனர்
மோர்பி பாலம் கம்பி வடம் அறுந்து விழுந்த காரணம் அளவுக்கு அதிகமாக எடை காரணமாக 150பேர் 200பேர் மட்டுமே தாங்கும் இடத்தில் 500 பேருக்கு மேல் கூட்டம் சேர்த்தது மட்டும் அல்லாமல் அதை ஆட்டி அதிர்வை ஆனந்தமாக அனுபவிக்க முயன்று இந்த விபத்து.. முதலில் அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுமதி அளித்தது தான்.
"மாநில உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 'நாடு முழுதும் காவல் துறைக்கு ஒரே சீருடை .இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்" அதோடு இது சம்பந்தமாக மாநிலங்கள் கலந்து பேசவேண்டும் என்றும் கூறி உள்ளார் - குறை மட்டுமே கூறுவது குறிக்கோள் என்று ஆன பிறகு - இப்படித்தான் விஷங்களை விஷயங்களாக கக்குவார்கள் - என்ன வேணா கூச்சல் போடுங்கள் - இன்னும் பல நூற்றாண்டுகள் பிஜேபி ஆட்சிதான்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
2015 டிசம்பர் மாதம் அம்மாஜி ஆட்சியில் ஒரு பெரிய சாதனை நிழ்ந்தது. செம்பர்ம்பாக்கம் ஏரியை அளவுக்கு மீறி திறந்து விட்டு சென்னை நகரத்தையே அலங்கொலப்படுத்திய வரலாறு கானாத பெருஞ் சாதனை.