ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்துார் : ''கோவில் ஆகம விதிகளில் அறநிலைத்துறை அதிகாரிகள் தலையிடுவதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னிதி சடகோப ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று அவர் கூறியதாவது: கோவில் நிலங்களை மீட்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. அதே நேரம் கோவில் நிர்வாகங்களை கவனிக்க வேண்டிய அதிகாரிகள், ஆகம விதிகளில் தலையீடு செய்து வருகின்றனர்.

இதற்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் குளறுபடிகளே உதாரணம். அங்கு பணியாற்றிய இணை ஆணையர் ஜெயராமன் என்ற அதிகாரி, ராமானுஜர் ஏற்படுத்திய சம்பிரதாயங்களை தடுத்துள்ளார்; ரத்து செய்துள்ளார்.
இது போன்ற அதிகாரிகளால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. இதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்ல சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (29)
ஆம்.ஜீயர் சொல்வது சரி. அரசுக்கு கடும் கண்டனம்.
ஆமை விதி என்றால் என்ன இது மனிதனால் உருவாக்கப்பட்டது. அடுத்தவர்களை ஏமாற்ற.
நீர் உன் ஏரியாவான சிரிவில்லிபுத்தூர் கோவிலை கவனியும். சிரிரங்கம் கோவிலை ரங்கராஜன் பார்த்துக் கொள்வார்.
இந்த அறமில்லாத துறையை கலைத்தால் தான் தமிழகத்தில் கோவில்கள் நிலைக்கும்.. அதிலும் குறிப்பாக திருட்டு திரவிடியன்ஸ் அழிக்கப்படவேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
0100