நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கார் என்ற மலைப் பகுதியில் ஏராளமான பழங்குடியினர் வசித்தனர். இந்த பகுதி தற்போது, குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ளது.
இங்கு வசித்த பழங்குடியினர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வந்தனர். கடந்த 1913 நவ., 17ல், பிரிட்டிஷ்ஆட்சியாளர்கள் நடத்தியகொடூர தாக்குதலில், 1,500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
இந்த இடத்தில், மங்கார் தாம் என்ற பெயரில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுச் சின்னம்
நாடு சுதந்திரம் அடைந்த பின், எந்த ஒரு வரலாற்றுப் புத்தகத்திலும் இந்த சம்பவம் பதிவாகவில்லை. மறைக்கப்பட்ட வரலாறாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் பன்ஸ்வாரா பகுதியில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத்தின் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மங்கார் தாம் நினைவிடத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரதமர் அறிவித்தார்.
இந்நிழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நினைவிடத்தை உலகம் முழுதும் அறியச் செய்யும் வகையில் இங்கு பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இது குறித்து ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களின் முதல்வர்களும் தீவிரமாக ஆய்வு செய்து ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
சீர்திருத்தவாதி
தேசிய நினைவுச் சின்னமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டதன் வாயிலாக, பழங்குடியின தலைவர்கோவிந்த் குருவின் பெருமை, இனி உலகம் முழுதும் தெரியும்.
பழங்குடியின தலைவராக விளங்கிய கோவிந்த் குரு, மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாகவும், ஞானியாகவும், ஆன்மிக வாதியாகவும் திகழ்ந்தார்.
சர்வதேச அங்கீகாரம்
கடந்த 1857க்கு முன்பே, இந்த பகுதியில் வசித்த பழங்குடியினர் சுதந்திர போராட்டத்தை துவக்கி விட்டனர்.
இந்த இடத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த இடத்தை பார்க்க வரும் இளைய தலைமுறையினருக்கு நம் வரலாறும், பெருமையும் தெரியும். அவர்களுக்கு ஒரு துாண்டுதல் ஏற்படும்.
சிலர் இதை தேசிய நினைவுச் சின்னம் என அழைக்கின்றனர். யார், என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து அழைக்கட்டும். ஆனால், மத்திய அரசுக்கும், இந்த நான்கு மாநில அரசுகளுக்கும், இந்த மங்கார் தாம்முடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜஸ்தானில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், அம்மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டும் பங்கேற்றார். விழாவில் கெலாட் பேசியதாவது:பிரதமர் மோடி எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும், அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பும், கவுரவமும் அளிக்கப்படுகிறது. ஜனநாயகம் ஆழமாக வேரூன்றிய காந்தி பிறந்த நாட்டின் பிரதமர் வந்துள்ளார் என்பதற்காக இப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதை அவர்கள் பெருமையாக உணர்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (3)
இப்போ பாத்துகிட்டே இருங்க சிதம்பரம் , தர்மபுரி எம் பி இருவர்க்கும் இங்கே நெறி ஏறும் .
அருமை.. அருமை.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
போங்க ஏறுமைகளா பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து முதன் முதலில் போராடிய தமிழ் வீர் துறவி தாய்மானவர் அவர்கள் பிரிடிஷ் கப்பலை ராமேஸ்வரம் வர விடாமல் வேறு வேல் கம்பு கொண்டு துரத்தி அடித்தவர் அப்பேற்பட்ட வீர மகனின் வரலாறு முற்றில் மறைக்க பட்டு விட்டது அது மட்டு பிரிட்ஷ்காரன் ஆட்சிக்காலத்தில் அவனை எதித்து முதல் போராட்டம் நடத்திய மா மன்னர்கள் மறுத்து சகோதர்கள் தான் வீர ராணி வேலு நாச்சியார் உடன் இணைத்து பிரிடிஷ் அரசி ஓடிஏ ஓடிஏ விரட்டி அடித்த வரலாறு தமிழ் நாட்டில் இருக்கு ஜான்சி ராணியை நமக்கு தெய்ரயும் வீர மங்கை வேலு நாச்சியாரை வட்டாகனுக்கு தெரியுமா? நினைய படி பார்த்தால் மரத்து சகோதர்கள் தூக்கில் இடைப்பட்ட இடத்தை தான் தேசிய நினைவு சின்னம் அறிவிக்க வேண்டும் அனால் வடக்கன் அரசியல் இது நடக்காது