ADVERTISEMENT
மதுரை:'தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெயரில் இதழியல் விருது வழங்க வேண்டும்' என, மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்,தாய் தமிழகத்தோடு இணைந்த நாள், மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க காரணமாக இருந்த 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., பெயரில், சிறந்த இதழ், இதழியலாளர்களுக்கு அரசு விருது வழங்க வேண்டும்.

பல்கலைகளில் டி.வி.ஆர்., பெயரில் இதழியல் இருக்கை ஏற்படுத்த வேண்டும். நாகர்கோவிலில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும். அவரது பெயரில் அரசு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை தினமலர் அலுவலக வளாகத்தில் உள்ள டி.வி.ஆர்., சிலைக்கு, பேரவை செயலர் சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
பத்திரிகையாளர் ப.திருமலை, குமரி மாவட்ட உருவாக்கத்தில் தினமலர் பங்கு குறித்து பேசினார். பொருளாளர் செல்வன், பேராசிரியர்பிரதீப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வித்தகர் விருது வந்தால் மகிழ்ச்சி