ADVERTISEMENT
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டில் மழைநீர் புகுந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றிரவு (அக்.,31) முதல் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால், காலையில் மழைநீர் வடிகால் மூலமாக தண்ணீர் வடிந்து காட்சியளித்தது. இந்த நிலையில் மதியம் முதல் மீண்டும் கனமழை துவங்கியது.

இதனால் பல இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் மழைநீர் தேங்கி காட்சியளித்தது. கருணாநிதியின் வீட்டை மழைநீர் சூழ்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
வாசகர் கருத்து (35)
இன்று முதல் இந்த கோபாலபுரம் ஏரியா வீடு போட் ஹவுஸ்2 என அழைக்கப்படும்.
நகரங்களில் வசிப்பவர்கள் குப்பை கூளங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் ஆகியவற்றை பொறுப்பில்லாமல் கழிவு நீர் கால்வாய்களில் கொட்டுவதால் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டு மழையின் போது நீர் தேங்குகின்றது என்பதை யாரும் உணர்வதில்லை.
போன வாரம், மழை பெய்த அடுத்த சில நிமிடங்களில் சொட்டுத்தண்ணீர் கூட இல்லாமல் வடிந்து விடுகிறது என்று டிவி யை வைத்து உருட்டினார்களே. எல்லாம் பொய்யா கோப்பால்? அல்லது இந்த மழைநீர் கடலுக்குச் செல்லும் வழி தெரியாமல் தத்தளிக்கிறதா? பேக்கேஜ் டூர் நடத்தும் மேயர் இதற்கு ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது.
சென்னை ஏரிகளில் கூட நாங்கள் தேங்கவிடவில்லை ..இதை நாங்கள் சொல்லாமல் செய்தோம் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மழை நீருக்கு கருணாநிதி வீடு என்பது தெரியாது