அக்., மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு
புதுடில்லி:கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,51,718 கோடி வசூலாகியுள்ளது. அக்டோபர் மாத வசூலானது, கடந்த ஏப்ரல் மாதம் வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய தொகையாகும்.
அதில்
சிஜிஎஸ்டி - ரூ.26,039 கோடி,
எஸ்ஜிஎஸ்டி - ரூ 33,396 கோடி,
ஐஜிஎஸ்டி - ரூ.81,778 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 41,215 கோடி உட்பட)

செஸ்- ரூ.10,505கோடி ( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 856 கோடி உட்பட) அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருவாய் வசூலுடன் ஒப்பிடுகையில், பல மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.9540 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (8)
இந்த பல லட்சம் கோடி வரி மத்திய அரசுக்கு சும்மா வந்தது அல்ல,நம் நாட்டு மக்கள் மனம் உவந்து செலுத்திய வரி அல்ல இது எல்லாம் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் மக்களின் ரத்தத்தை ஆக்டோபஸ் போல சுத்தமாக உறிஞ்சி எடுத்து அவற்றின் மூலம் கிடைத்த வரி என்றுதான் சொல்ல வேண்டும்,சாமானிய மக்களின் வருமானத்தை கண்டிப்பாக நன்கு உறிஞ்சி எடுத்துவிட்டது மத்திய அரசு..இதில் என்ன பெருசா பெருமை ,பீத்தல் வேண்டிக்கிடக்கு . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
ஜிஎஸ்டி வரி கிட்டத்தட்ட பல லட்சம் கோடி வரி வசூல் ஆகி உள்ளது.மேலும் இந்தியாவில் வெறும் ரெண்டு சதவீத மக்களிடம் இருந்து வசூலிக்கும் வருமான வரியைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு மனம் வருமா???மத்திய அரசின் வருமான வரி வெறியால் பெரும்பாலும் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் மட்டுமே வெகுவாக பாதிக்கப் பட்டு வருவது கண் கூடு .நடுத்தர மக்களை வாட்டி வதைத்துப் பெறுகின்ற வருமான வரியை வேண்டாம் என்று கூற மத்திய அரசு தயாரா ???கட்டாயம் மனம் வராது..நடுத்தர மக்களை எல்லா விதத்திலும் வாட்டி வதைப்பதுதான் மத்திய அரசுக்கு மிக முக்கியமான வேலை . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
ஜிஎஸ்ட்டி வரி வசூல் சும்மா பிச்சிக்கிட்டுப் போகுதுன்னு மத்திய அரசு சும்மா பீத்திக்கிட்டே இருக்க வேண்டியதுதான் இதனால் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு என்ன பயன் ???பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை எந்த நன்மையையும் கிடைக்கப்போவதும் இல்லை .இந்த பல லட்சம் கோடி பல மாலினத்தில் உள்ள மக்களிடம் இருந்து பெறப்பட்டது ஆனால் மத்திய அரசு தனக்கு கீழே உள்ள மாநில அரசுகளுக்கு கொடுத்து ஏதாவது உதவி செய்யப் போகிறதா ???நிச்சயம் கொடுக்கப்போவதில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை,இதில் வெறும் வசூலைப் பற்றி வெட்டி ஜம்பம் எதுக்கு ???தேவையே இல்லை .வசூல் எவ்வளவு ஆனால் மக்களுக்கு என்ன??? ஜி.எஸ்.ராஜன் சென்னை . .
என்ன சார் இது.200 ரூபாய்க்கு இதுக்கு மேலே எப்படி தெரியும்? வருமான வரி GST இரண்டும் வரி என்று தெரிஞ்சதே பெரிய சாதனை
ஜிஎஸ்ட்டி வரி வசூல்...... இதுவும்.... இது தண்ணியை அப்பா குடி அம்மா குடி தான் .முன்பெல்லாம் அன்றாட பொருள்களுக்கு இவளவு வரி செலுத்தி பார்த்த தில்லை. மத்திய அரசுடன் மாநில அரசும் கூட்டு கோச்லலையில் ஈடு பட்டுள்ளது . ஆனால் பெட்ரோலுக்கு மட்டும் ஜிஎஸ்ட்டி வரி வசூல் சேர்க மாநில அரசு தயக்கம் காட்டுகிறது . எங்கோ இடிக்குது .