Load Image
Advertisement

பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: ஸ்டாலின் அறிவுரை

 பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: ஸ்டாலின் அறிவுரை
ADVERTISEMENT

சென்னை: பருவமழை எதிர்கொள்ள, அமைச்சர்கள், அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி துவங்கியுள்ள நிலையில் ,சென்னை , திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பருவமழையை முன்னிட்டு, எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வலியாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று(நவ.,01) ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள் தயாராக இருக்க வேண்டும். மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மாவட்ட கலெக்டர்களுக்கு உண்டு. இம்முறை மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் பாதுகாப்பு முக்கியம்:





தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே அழைத்து செல்ல வேண்டும். ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

Latest Tamil News

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில், உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நிவாரண முகாம்களில், தரமான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கு சவாலாக இருந்ததை மறந்து விடக்கூடாது. தடையின்றி மின் விநியோகம், பால் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து (45)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    மக்கள் என்ன ராணுவமா என்றும் தயார் நிலையில் இருக்க???மொதல்ல நிறைய படகுகளை, கட்டுமரங்களை ரெடி பண்ணுங்க அவை கண்டிப்பாக மீட்புப்பணிக்கு மிகவும் உதவும் , ஜி.எஸ்.ராஜன் சென்னை

  • ஆரூர் ரங் -

    ஏன் ? வீட்டுக்கு ஒரு விலையில்லா படகு தரும் திட்டம்🙃 உள்ளதா?

  • V GOPALAN - chennai,இந்தியா

    CM is begging all his office bearers to take care on their own and do not trouble him

  • vbs manian - hyderabad,இந்தியா

    வருடாவருடம் தயாராய் இருந்ததை போன்று இந்த வருடமும் தயாராயிருப்பார்கள்.

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    என்ன சீனு.. ஒரு ரெயின் கோட்டும் முட்டி வரைக்கும் ரப்பர் ஷூ போட்டுக்கிட்டு அவனுக்கு 5000 குடு விவசாயிக்கு 20000 குடுன்னு என்னா அழிச்சாட்டியம்.. ஹிஹிஹி.. இப்போ நாம சாக்குரதையா இருக்கனுமாம்.. கேடுகெட்ட புத்தி..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்