.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 80 பல் மருத்துவர்கள் கூட்டாக அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
12 ஆண்டுகளாக காத்திருக்கும் 80 பேர்
தி.மு.க., வின் பொற்கால ஆட்சியான கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் நாட்டிலேயே முதன்முறையாக தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் பல் மருத்துவ பிரிவு துவங்கப்பட்டது.
வட்டம் சாரா அரசு பொது மருத்துவமனைகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தற்காலிகமாக பல் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் தற்காலிகமாகவே தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறோம். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் துவங்கப்படுவதற்கு முன்னதாகவே நாங்கள் கருணாநிதி அவர்களால் பணியமர்த்தப்பட்டோம்.
நாட்டிற்கே முன்மாதிரி திட்டமாக துவங்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை தற்காலிகமாக பணிபுரிந்து வரும் எங்களை பணிவரன் முறை செய்து, பணி நிரந்தரம் செய்யுமாறு தங்களை மிகவும் சிரம்தாழ்ந்து பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (9)
0000
அவங்களை நிரந்தரம் செய்து உரிய ஊதியம் கொடுங்கள்....
இதெல்லாம் நினைப்பதற்கா இன்றைய ஆளும் அரசிற்கு நேரம் இருக்கிறது, சாராயம் எவ்வளவு விலை ஏற்றம்/ஏற்றலாம். டெண்டர்களில் எவ்வளவு பார்க்கமுடியும் - ச்ச்சே அரசு செலவினங்களைச மட்டுமே சொல்றோம் நம்புங்கோஓஓ , பாவம் பல் மருத்துவர்கள் , வேறு என்ன சொல்ல முடியும்ம்ம் .
அட போங்கப்பா ஆண்டியயே பஞ்சாமிர்தத்திற்கு அலையறாராம் . . . . . . .
12 வருடமாக.....என்ன திருட்டு திராவிட மடியல் அரசே இன்னுமா கண்ணு தெரியல்லே.....இல்லே காது கேக்கல்லே....இல்லே அப்படியா விஷயம் அப்போ ஒன்னும் பண்ண முடியாது.....