Load Image
Advertisement

நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: போலீஸ் அனுமதி

 நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: போலீஸ் அனுமதி
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்த தமிழக போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்.,2ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அக்.,2ல் நடைபெற இருந்த அனைத்து பேரணி, நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்க முடியாது என போலீஸ் மற்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Latest Tamil News
இதனையடுத்து நவம்பர் 6ம் தேதி ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், ஊர்வலத்திற்கு அனுமதி தராவிட்டால், போலீஸ் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்தது. இந்த நிலையில் நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


வாசகர் கருத்து (46)

 • G Mahalingam - Delhi,இந்தியா

  விசிக திமுக இலவசமாக ஆர்எஸ்எஸ் சை விளம்பரம் அதிகமாக செய்து பாஜாகவுக்கு மக்கள் ஆதரவை அதிகமாகி விட்டார்கள். முன்பு சத்தமே இல்லாமல் ஊர்வலம் போனார்கள். பத்திரிகைகளில் நடு பக்கத்தில் 5 வரியில் வந்து அடங்கிவிடும். ஆனால் இப்போது

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  சங்கீ vs நோட்டா அப்படின்னு கூவின விடியல் சைக்கோ குருமா சைமன் எல்லோரும் அலறுவது ஏன்?

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  நவ.,6ல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்: போலீஸ் அனுமதி.நல்ல செய்தி ஒரு கற்பனைக்கு /ஒரு உவமைக்கு /ஒரு எடுத்துக்காட்டுக்கு - செய்தி - எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அதிமுக ஆட்சியில் இருந்த போது,அதிமுக அரசு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த போலீஸ் அனுமதி வழங்கியது .இதற்க்கு தமிழக போலி மதச்சார்பின்மை மற்றும் ஹிந்து கடவுள் மறுப்பு கூட்டங்களின் எதிர்வினை என்னவாயிருந்திருக்கும் ? கி வீரமானமணி - மத்திய மதவாத அரசின் கைப்பொம்மையாக உள்ள அதிமுக அரசு ,ஹிந்து கடவுள் மறுப்பு பெரியார் பிறந்த மண்ணில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது மதவாதம் ஆகும் .இதனை ஆதரிக்க மாட்டேன் .குருமா -சிறுத்தை கூட்டங்கள் -மனுநீதியை பின்பற்றும் அதிமுக அரசு சனாதன தர்மத்திற்கு ஆதரவாக ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது சமூக நீதிக்கு எதிரானது .ஆதலால் இதனை கண்டிக்கிறோம் .சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சிகள்- இந்த ஆர் எஸ் எஸ் ஊர்வல அனுமதி மதப்பிரிவினைக்கு தான் வழிவகுக்கும் .மதச்சார்பின்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் .தமிழக கான் கிராஸ் -ஆர் எஸ் எஸ் ஊர்வல அனுமதி ஆரிய சதி ,மதநல்லிணக்கத்திற்கு கேடு .ஆதலால் இதனை நாங்கள் ஆதரிக்கவில்லை என அறிக்கைகள் வரும் .ஆனால் இப்போது திராவிடியல் ஆட்சியில் என்பதால் கள்ள மௌனங்களைத்தான் சாதிப்பார்கள் .இதில் கொடுமை என்னவென்றால் சமூக நல்லிணக்க பேரணிகள் நடத்திய கருப்பு தாலிபான் திக திராவிட கூட்டங்களும் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்களும் இந்த கோவை குண்டு வெடிப்புகளை இன்னமும் கண்டிக்கவில்லை என்பது தான் வருத்தம் தரும் விஷயம் .இவர்களின் கொட்டங்கள் முற்றிலும் அடங்க ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடக்க வேண்டும் .

 • பேசும் தமிழன் -

  கூப்பிடு அந்த தெருமா வை.... அதே 6 ஆம் தேதி.... நாங்களும் மண் சோறு சாப்பிடும் போராட்டம் நடத்த போகிறோம் என்று கூற சொல்.... இப்படிக்கு விடியல் தலைவர்

 • Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா

  மனிதாபிமான மிக்க ஆர் எஸ் எஸ் ட்ராவிட அரசின் கைப்பாவையாக போலீஸ் செயல் படுவதால் நசுக்க முயற்சிக்க படுகிறது. வெட்கமாக விஷயம் தமிழகத்துக்கு வாழ்க தமிழகம் வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement