இதையடுத்து, கந்த சஷ்டி பாராயணம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்தது. பாஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஏராளமான பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.

பாதுகாப்பு:
கோட்டைமேடு பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வாகன போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, பாஜ., மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஹிந்து. முஸ்லிம் என பிரித்து பார்க்க கூடாது. அதேபோல் கோவையில் எந்த மதத்தினரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. கோவை மக்கள் மதவேறுபாடின்றி அமைதி காத்தனர். தமிழக அரசே தொந்தரவு செய்வது நோக்கமல்ல.
பா.ஜ., வினர் எதிரானவர் அல்ல:
எந்த மதத்திற்கும் பா.ஜ., வினர் எதிரானவர் கிடையாது.கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஒரு குண்டா அல்லது இரண்டு குண்டு வெ டித்ததா என்று தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டு என்பது தெரிந்ததும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தது.
பால்ரஸ் குண்டு, ஆணி:
சிலிண்டர் விபத்து என தற்போதும் கூறிவருவது ஏன்?. தீவிரவாத தாக்குதல் என கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்தவே கூறுவது ஆகும். குற்றவாளிகளை ஒரு மதத்தை சேர்ந்தவர் என கூறவில்லை. ஐ.எஸ். கொள்கை தவறு என இஸ்லாமிய குருமார்களே கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சில செய்தியாளர்கள் கோரினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, 'மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீத செய்தியாளர்கள் உள்ளனர்.
நான் மன்னிப்பு கேட்கவே முடியாது. மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே இல்லை. தவறே செய்யாதபோது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அனைத்து செய்தியாளர்களையும் பொதுவாக நான் விமர்சிக்கவில்லை. நான் தவறு செய்ததாக நினைத்தால் என் பேட்டியை புறக்கணிக்கலாம். அதற்கு செய்தியாளர்களுக்கு உரிமை இருக்கிறது' என காட்டமாக பதிலளித்தார்.
இப்படி சொன்னால்தான் புரியும்..