Load Image
Advertisement

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்

  மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான்
ADVERTISEMENT
சென்னை:மார்பக புற்றுநோய் குறித்து 'வாக்கத்தான்' எனும் நடைபயணம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அக்டோபர் மாதம், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம்., புற்றுநோய் மையம் சார்பில், விழிப்புணர்வு நடைப்பயணம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதை, போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., எம்.கே.மோகன், திரைப்பட நடிகை ரேவதி, புற்றுநோய் சேவைகளின் மருத்துவ ஆலோசனை வாரிய மூத்த தலைவர் டாக்டர் எம்.ஏ.ராஜா மற்றும் கல்லுாரி மாணவியர், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

மேலும், 'கேன் ஸ்டாப்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், 'ஒன் வாக் ஒன் ஹோப்' என்ற தலைப்பில், பெசன்ட் நகரில், நேற்று, வாக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது.

இதில், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இந்த நோயால் மரணமடைந்தோரின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, கேன் ஸ்டாப் அமைப்பின் துாதரும், நடிகையுமான ராதிகா சரத்குமார், வாக்கத்தான் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில், கல்லுாரி மாணவ - மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின், அவர் பேசியதாவது:

தங்களை விட, அடுத்தவர் நலன் முக்கியம் என பெண்கள் கருதுவர். இது பெண்களுக்கான குணம். உடம்பு சரியில்லாத போதும், உடன் இருப்போரை கவனித்து விட்டு, கடைசியாக தான் அவர்களை கவனிப்பர்.

நாம் நல்லா இருந்தால் தான், பிறரை நன்றாக கவனிக்க முடியும் என்ற எண்ணம் பெண்களிடம் ஏற்பட வேண்டும். இதை உணர்ந்து, தங்கள் உடல் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement