Load Image
Advertisement

‛‛ காவல்துறையா, அறிவாலயத்தை காக்கும் துறையா? : அண்ணாமலை பதிலடி

சென்னை: தமிழக காவல் துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


@1brகோவையில் கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாருக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் எனவும், அண்ணாமலை தொடர்ந்து காவல்துறை மீது அவதூறு பரப்பி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தார்.



Latest Tamil News



இதற்கு பதில பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?. டிஜிபி தன்னை சர்வாதிகாரியாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சமரசமின்றி நடவடிக்கை எடுங்கள். வழக்கின் போக்கை திசை திருப்ப என்ன கேட்டுவிட்டோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கேள்வி எழுப்பக்கூடாது என கூறுவதற்கு போலீஸ் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.


மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய சுற்றறிக்கை, 21ம் தேதி கிடைத்ததாக கூறப்படுவது பொய். அக்.,21ல் ஜமீஷா முபீன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததற்கு போலீஸ் மறுப்பு தெரிவிக்குமா?.


தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் படி, நடவடிக்கை எடுக்க வே ண்டும். ஆளும் அரசை கேள்வி எழுப்புவது, மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பது எங்கள் கடமை. கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 7 நாட்கள் ஆகியும் முதல்வர் மவுனம் காக்கிறார். 6 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கும் போலீஸ் துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்ல தயங்குவது ஏன்?.

Latest Tamil News

இதுவரை இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்?. கோவையில் நடந்தது தற்கொலைத் தாக்குதல் என தமிழக அரசு அறிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்?. கைதான 5 பேர் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு என்பதை குறிப்பிடாதது ஏன்?. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (86)

  • venugopal s -

    அப்படி இவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்றால் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் இதுவரை இது குறித்து ஏன் விளக்கம் கேட்கவில்லை, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை? மத்திய அரசே உங்களுடையது என்ற ஆணவத்தில் பொய்யான தகவல்களை பரப்புகிறார் அண்ணாமலை!

  • srinivasan covai -

    ஆட்டுக்குட்டிக்கு தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது

  • Dhamodharan - Chennai,இந்தியா

    தமிழகத்தில் எடுபடாது...

  • Dhamodharan - Chennai,இந்தியா

    அப்படியே இருக்கு....

  • Siva - Aruvankadu,இந்தியா

    அண்ணாமலை சொல்வதுகேட்டு ஏன் பதட்டம் அடைய வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement