Load Image
Advertisement

காவல்துறைக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்: சைலேந்திரபாபு வேண்டுகோள்

சென்னை-'கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் தமிழக காவல் துறைக்கு தமிழக பா.ஜ., தலைவர் களங்கம் கற்பிக்க வேண்டாம்' என டி.ஜி.பி., சைலேந்திரபாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Tamil News


இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம், நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதுாறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன் அது என்ன என்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

இந்த வழக்கை தாமதமாக, தேசிய புலனாய்வு முகமையான, என்.ஐ.ஏ.,விற்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது; இதுதான் சட்டம்.

பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ; காவல் நிலைய அதிகாரி, மாநில அரசுக்கு உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அறிக்கை பெற்றவுடன், மாநில அரசு மத்திய அரசிற்கு விரைவில் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு 15 தினங்களுக்குள் வழக்கின் தன்மைக்கு ஏற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கும். இதுதான் சட்டம்.

ஆனால் நடைமுறையில் மத்திய அரசு, தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்து பெற்று, விசாரணைக்கு உத்தரவிட சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை, அந்த வழக்கின் விசாரணையை, வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இந்த சட்ட நடைமுறை எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசிற்கு மாநில அரசு முறையாக அறிக்கையை அனுப்பி அதன் பின் வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில் மத்திய உள்துறை தாமாகவே முன்வந்து, என்.ஐ.ஏ., விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால், கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன், முதல்வர் ஸ்டாலின் என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதில் எங்கே தாமதம் வந்தது.

இதற்கு முன், இதுபோன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துகூட வழக்குகள், என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பிறகே, என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

தற்போது திடீரென வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முன்பே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது.

ஏனென்றால், அவர் குறிப்பிடுவது, மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை.

இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

அந்த சுற்றறிக்கை மாநில அரசுகளுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும் காவல்துறை அதை அலட்சியம் செய்ததாகவும் பொய்யாக பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார்.

அக்.,18ல் வந்த வழக்கமான சுற்றறிக்கை, 21ம் தேதி பெறப்பட்டு, உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
Latest Tamil News

இவர் சொல்வது போல கோவையில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகின்றனர் என்ற தகவல் கிடைத்திருத்தால் தமிழக காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து வீடுகளை சோதனையிட்டு, வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும்.

எனவே தமிழக பா.ஜ., தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் காவல் அதிகாரியான அண்ணாமலை, இதுபோன்ற உண்மையில்லாத, மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி, தமிழக காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (113)

  • P Ravindran - Chennai,இந்தியா

    அண்ணாமலை பேசியது உண்மை. சம்பவம் நடந்த பின் ஆளுங்கட்சிக்கு சாதகமாக காரணம் கூறுவது காவல்துரையின் இன்றய. பழக்கம்

  • வீரா -

    ஹிந்துக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க திமுக அரசு அனுமதிக்காது. காவல்துறைக்கு திமுக IT wing என்ன சொல்லுமோ என்ற அச்சம். வரும் தேர்தல்களில் காவல்துறை குடும்பங்கள் திமுகவை எதிர்த்து வாக்களித்து பழி தீர்க்கும். சைக்கிள் பாபு போன்றவர்கள் 32 பற்களையும் காட்டி சிரித்து கொண்டு அடுத்த முதல்வருக்கு சல்யூட் வைப்பார்கள். அப்படியே பேட்டரிவாளான் மீது ஒரு கண் இருக்கட்டும்.ஏன் என்றால் சென்னை அடிக்கடி ராகுல் காந்தி வந்து போகும் இடம்.

  • Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா

    இவர் என்ன தமிழ்நாடு DGPயா இல்ல அறிவாலயத்து தீய சக்தி குடும்பத்துக்கு செக்யுரிட்டியா?

  • வீரா -

    மீசைகார நண்பா உனக்கு ரோஷம் அதிகம்டா! அதைவிட வேஷம் அதிகம்டா! அதைத்தவிர (வெற்று ) கோஷம் அதிகம்டா!😄😄😄

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த கோவை கார் (குண்டு) வெடிப்பு விஷயத்தை விடுங்கள். மற்ற விஷயங்களிலாவது காவல்துறை தன்னிச்சையாக செயல்படுகிறதா, என்றால், இல்லவே இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement