Load Image
Advertisement

அவர்கள் தயிர் சாதத்துடன் பணி செய்கின்றனர் நாம் பிரியாணி சாப்பிட்டு பாட்டில் போடுறோம்: அழகிரி

சென்னை--'ஆர்.எஸ்.எஸ்., அர்ப்பணிப்பு கொண்ட இயக்கம்' என்றும், 'காங்கிரஸ் சந்தை கடை' என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Latest Tamil News

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அக்டோபர் 22-ம் தேதி, 'காங்கிரசும் -மதச்சார்பின்மையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இதில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் அழகிரி பேசியதாவது:

யாரிடம் கட்டுப்பாடான அமைப்பு இருக்கிறதோ, அந்த இயக்கம் வெற்றி பெற முடியும். பா.ஜ.,வுக்கு ஏழு லட்சம் பேர் ஓட்டுச்சாவடி ஏஜன்ட்களாக உள்ளனர். அவர்கள் பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் கிடையாது; அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.,சை சேர்ந்தவர்கள்.

அவர்கள் சாதாரணமாக சைக்கிளில், தயிர் சாதம் கட்டிக் கொண்டு வருகின்றனர். கடுமையாக தேர்தல் வேலை செய்கின்றனர்.

ஓட்டுச்சாவடியில் முகவர்களாக இருக்கின்றனர். அந்த பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு பிரியாணி பொட்டலம், 500 ரூபாய் பணம், 'பாட்டில்' கொடுக்க வேண்டாம். கொள்கைக்காக வருகின்றனர்.

பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை எதிர்ப்பவர்கள், எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் ஆட்களை வைத்திருக்கின்றனரா? பணம், பாட்டில், பிரியாணி கொடுக்காமல் தேர்தல் வேலை செய்வரா? அதுபோல கொள்கை படை இருந்தால் தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

இதைச் செய்யாமல், பெயரளவுக்கு சத்திரம் மாதிரி ஒன்றை நடத்தி கொண்டிருந்தால், சந்தைக் கடை மாதிரி ஒன்றை வைத்திருந்தால், யுத்தத்தை எதிர்கொள்ள முடியாது. இதை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வீடியோவை, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு உள்ளிட்டோர், சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் விவாதப் பொருளானது. ஆர்.எஸ்.எஸ்.,சை வியந்து பாராட்டியதோடு, காங்கிரசை 'சத்திரம், சந்தை கடை' என்றும், அழகிரி பேசியிருப்பது, அக்கட்சியினரை அதிர வைத்துள்ளது.
Latest Tamil News
இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில், '55 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சில பத்து பேர் தான் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக முடிகிறது.

'எந்த பிரதிபலனும் கிடைக்காது என தெரிந்தும், கொள்கைக்காக, பல்லாயிரம் பேர், சொந்த பணத்தை செலவு செய்து கட்சி பணியாற்றி வருகின்றனர்.

'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில், மூன்றே முக்கால் ஆண்டுகளாக இருப்பவர், ஆர்.எஸ்.எஸ்.,சுடன் ஒப்பிட்டு, காங்கிரசை கிண்டலடித்திருப்பது வேதனை அளிக்கிறது' என்றார்.


வாசகர் கருத்து (61)

  • Raa - Chennai,இந்தியா

    ஐயோ தலைவரே, நீங்க மைன்டு வாஸ்சுன்னு நெனச்சு சத்தமா பேசீட்டு இருக்கீங்க. மைக்க ஆப் பண்ணுங்க

  • Raa - Chennai,இந்தியா

    ஐயோ thala

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அண்ணன் அழகிரி 'கட்சி தாவல்' ஏதாவது செய்ய போகிறாரா...?

  • Girija - Chennai,இந்தியா

    அவர்கள் தயிர் சாதம் என்று இளப்பமாக நினைக்க வேண்டாம், நீங்கள் எங்கு மறைமுகமாக குறிவைக்கின்றீர்கள் என்று எங்களுக்கு தெரியாமல் இல்லை. இப்படி மதங்களுக்குள் குள்ள நரித்தனம் செய்துவந்தால் தான் இன்று உங்களுக்கு ஆப்பிள் சிக்கிய குரங்கின் நிலை .

  • sunder - pondy,இந்தியா

    Neenga dhaan "the-vidyal" aatchi Dra'vidiyaa' katchikku Jing chak poadureengale. engerndhu unga katchi valarum? Saavunga

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement