உண்மையில், கோவையில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவர் சொல்ல வருகிறார் என்றால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்வாரா?
* வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்து 36 மணி நேரம் கடந்த பின்னும், அது தொடர்பான முறையான தகவல்களை காவல் துறையோ, தமிழக அரசோ வெளியிடாமல் இருந்தது ஏன்?
ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் ?
* அண்ணாமலை பேட்டிக்கு பின் தானே, வெடிகுண்டு நிகழ்வில் இறந்த ஜமேஷா முபினோடு தொடர்புடைய ஆறு பேரை கைது செய்துள்ளீர்கள்?
* சாதாரண சிலிண்டர் வெடிப்பு என்று கூறி வந்த தமிழக காவல் துறை, இத்தனை பேரை கைது செய்திருப்பது ஏன்; என்.ஐ.ஏ., விசாரணைக்கு அனுப்பியது ஏன்?
* ஜமேஷா முபின், இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் இயங்கிய ரஷீத் அலி மற்றும் அன்சாருதீனுடன் தொடர்பில் இருந்தது உங்களுக்கு தெரியுமா?
* கடந்த 2019ல் ஜமேஷா முபினை என்.ஐ.ஏ., விசாரித்து, எச்சரித்து அனுப்பி இருக்கிறது. அதன் பின், தமிழக போலீசார் கண்காணிப்பில் அவர் இருந்துள்ளார். என்.ஐ.ஏ., என்பது விசாரணை அமைப்பு. அது, கண்காணிப்பில் ஈடுபடாது. எனவே, ஜமேஷா முபின் செயல்பாடுகள் குறித்து, தமிழக போலீஸ் என்ன கண்காணித்தது? திரட்டிய தகவல் என்ன? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
* ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேர் குறித்து, மத்திய உளவுத் துறை, 2018 ஆக., 27 மற்றும் 2022 ஜூலை 30 ஆகிய தேதிகளில், தமிழக அரசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதா, இல்லையா?
* அந்த எச்சரிக்கை கடிதத்தில், 96 பேர் குறித்து பட்டியலிட்டு, அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. அவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது உண்மையா? அந்த பட்டியலில், 89வது நபராக ஜமேஷா முபின் குறித்து, விலாவாரியாக குறிப்பிட்டு இருந்தது உண்மையா, இல்லையா?
* இந்த விபரங்கள், தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்து, கோவை மாநகர காவல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்கும்படி எச்சரிக்கபட்டனர் என்பது உண்மையா? தேவையானால் சம்பந்தப்பட்டவர்களை சந்தேகத்தில் கைது செய்தும் விசாரிக்கலாம் என அனுமதி கொடுத்தும், சம்பந்தப்பட்டவர்களை கண்காணிக்காமல் விட்டது ஏன்?
* கோவையில் பயங்கரவாத செயல்பாடு ஏதும் இல்லை என்றால், கூடுதலாக மூன்று காவல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என, அறிவிப்பு வெளியானது ஏன்?
* கோவையில் எந்த பதற்றமும் இல்லை என்றால், எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள எட்டு போலீஸ் அதிகாரிகள், அங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது ஏன்?
* உள்துறையை தன்னிடம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, இதுவரை எந்த கருத்தும் கூறவில்லையே ஏன்?
வாசகர் கருத்து (114)
இவர்களிடம் எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. இருக்கவே இருக்கிறது திசை திருப்ப ஆயிரம் காரணங்கள். முதலில் இவரை விசாரிக்க வேண்டும் ஏன் முட்டு கொடுக்கறீங்க
இவர் ஏன்தான் வாயை விட்டோம் என்று ஓட்டம் பிடிக்க வேண்டும் அதிமுகவுக்கு ஓர் ஜெயக்குமார், இங்கு இவர் எங்கே, முதல்வர் 'சிலிண்டர்' நாடகம் முடிந்தபின் கப் சிப்
இவ்விஷயத்தை மூடி மறைத்து திசை திருப்ப (1) குஷ்பு மேட்டர் (2) முதல்வருக்கு காய்ச்சல் மருத்து மனையில் படுக்கை.லேசான காய்ச்சலுக்கு படுக்கையா?
முதல்வரின் மௌனத்தில் இருந்து இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்வதுவரை ஒவ்வொன்றிற்கும் காரணம் இருக்கு ராஜா கோணியம் யோசனை பண்ணி பாருங்க முடியலையா? 28.10.2022 தேதியிட்டு நியூசெவேன் கேள்வி நேரம் விவாதத்தில் புட்டு புட்டு வைச்சாங்க பாருங்க .
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், சட்டம் தன் கடமையை சரியாக செய்துகொண்டு வருகிறது.எல்லாம் தன்னால்தான் என்று நினைத்தால் காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது கதைதான், இவருக்கு முன் கூட்டியே எல்லாம் தெரியும் என்றால் வேறு பல வம்புகளில் மாட்டிக்கொள்வார், தவளை தன் வாயால் கேட்ட கதையை அண்ணாமலைக்கு தெரியும் தானே?