Load Image
Advertisement

தூத்துக்குடி கோவில்களில் ஸ்டாலின் மகள் சாமி தரிசனம்

 தூத்துக்குடி கோவில்களில் ஸ்டாலின் மகள் சாமி தரிசனம்
ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடி சென்ற திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அங்குள்ள சிவன், பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.


திமுக.,வில் கருணாநிதி, ஸ்டாலின் உட்பட பெரும்பாலான தலைவர்கள் ஹிந்து மத பழக்க வழக்கங்களை விமர்சித்து வந்துள்ளனர். அவர்கள் ஹிந்து கோவில்களுக்கு செல்வதும் இல்லை, ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் ஹிந்து மத வழிபாடுகளை தவிர்த்து வந்தலும், அவரது மனைவி துர்கா அடிக்கடி கோவில் கோவிலாக சென்று வழிப்படுவது தொடரதான் செய்கிறது. அந்த அளவிற்கு கோவில் வழிபாடில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர்.

Latest Tamil News
இந்த நிலையில் தற்போது ஸ்டாலினின் மகளும் கோவிலில் வழிபாடு செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. தூத்துக்குடி சென்ற ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அங்குள்ள திமுக எம்.பி., கனிமொழியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.


பின்னர், சைரன் வைத்த காரில் தூத்துக்குடி சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் அமைச்சர் கீதா ஜூவனும் தரிசனம் செய்தார். வெளியே ஹிந்து மத கடவுள்களை தவிர்ப்பதும், வீட்டிற்கு உள்ளே தனது மனைவி, மகள் கோவில் வழிபாடு செய்வதும் என ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Latest Tamil News


வாசகர் கருத்து (35)

  • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

    ……

  • Sharvintej - மதுரை ,இந்தியா

    ராசா சொன்ன உவமை இப்போது பொருத்தி பாக்கலாமா

  • venugopal s -

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகள் கோவிலுக்கு போவதும், சாமி கும்பிடுவதும் அவர் சொந்த விஷயம், கடவுள் நம்பிக்கை என்பது அவர் தனிப்பட்ட உரிமை.அதில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது வேண்டாத வேலை! பிறக்கும் போதே யாரும் நாத்திகரும் கிடையாது ஆத்திகரும் கிடையாது.அவரவர் நம்பிக்கை அவரவருக்கு, போய் உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள்!

  • சாமி டா -

    எந்த ஒரு கொள்(ளை)கை யாக இருந்தாலும் வுட்ல இருந்து ஆரம்பிக்கனும்... விடியல் குடும்பத்துல கொள்கைக்கு no பா.......

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அது அந்த பொண்ணோட தனிப்பட்ட விருப்பம் அதனை எதற்கு இங்கே கொண்டு வருகிறீர்கள் ? உங்களுக்கும் சுபவீ போன்ற கழிசடைகளுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்