கடலூர்: ‛திமுக.,வின் பட்டத்து இளவரசர் உதயநிதி, ஹிந்தியை எதிர்ப்பதாக கூறிவிட்டு ஹிந்தி பட ஹீரோயின்களுடன் நடிக்கிறார், ஹிந்தி படங்களை வாங்கி வெளியிடுகிறார்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நக்கலாக விமர்சித்துள்ளார்.
ஆனால் அவரது படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் எல்லாம் ஹன்சிகா மோத்வானி, ஏமி ஜாக்சன் போன்றவர்கள். லால் சிங் சத்தா என்னும் ஹிந்தி படத்தை வாங்கி வெளியிடுகிறார். ஆனால், ஹிந்தியை எதிர்ப்பதாக கூறி வருகிறார். தமிழுக்காக பேசி வரும் சாலமன் பாப்பையாவுக்கு எந்த அங்கீகாரமும் அளிக்காத திமுக அரசு, பெண்களை கொச்சையாக பேசிய லியோனிக்கு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பு அளிக்கிறது.

நம்ம முதல்வர் ஸ்டாலின், ‛பூனை மேல் மதில்' என தமிழை மாற்றி பேசுகிறார். இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் லட்சணம். நம் குழந்தைகள் ஒரு புதிய மொழியை படிக்க நினைத்தாலும், அதனை தமிழகத்தில் படிக்க விடமாட்டார்கள் போல. திமுக அரசு மூன்றாவது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர். பாரதியார் கூட 14 மொழிகளை படித்துவிட்டு தான் அதில் தமிழ் மொழி தான் சிறந்தது எனக் கூறியுள்ளார். ஆனால், இவர்கள் (திமுக.,வினர்) படித்த ஒரு மொழியை கூட ஒழுங்காக பேசத் தெரியவில்லை.
அப்பன் வீட்டு சொத்தா?
காங்கிரஸ் ஆட்சியின் 10 ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. கொத்து கொத்தாக நடைபெற்றது. ஆனால், மோடி பிரதமராக வந்தபிறகு ஒரு இடத்தில் கூட நடைபெறவில்லை. தமிழக மண்ணில் பயங்கரவாதிகள் நடமாடும் அளவிற்கு மாறி விட்டது.
இன்னும் 14, 15 மாதங்களில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் வரை பொறுமையாக இருக்க வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி, என்னை கடலூருக்குள் விடமாட்டோம் என்கிறார். கடலூர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?. கடலூரில் பா.ஜ., நுழைந்துவிட்டது. அவர் இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு எம்எல்ஏ.,வாக இருந்து ஆண்டு அனுபவத்திவிட்டு போய்விடுவார். அணையப்போகிற தீபம் தான் பிரகாசமாக எரியும். அதுபோல தான் அவரும். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (57)
பாவம் அண்ணாமலை விட்டுவிடுங்கள். இப்படி பச்சை மண்ணாயிருக்கிறார். ஐயா, மறுபடி மறுபடி எல்லாம் சொல்ல முடியாது. தொழில் என்பது வேறு, மொழிப்பற்று என்பது வேறு தமிழ் பட தயாரிப்பாளர்கள் வேறு மொழிகளில் படம் எடுத்ததில்லையா? உளறுவதற்கும் அளவுண்டு இவரெல்லாம் மாநிலா தலைவர்? இப்படியே போனால் இவர் பேச்சுக்கு காசு கொடுத்தாலும் கை தட்ட ஆள் வராது
அந்தக்காலத்திலேயே ஜப்பானிய நடிகை ரூங்ரெட்டாவை தமிழில் பேச வச்சு பச்சைக்கிளி முத்துச்சரம்னு பாட வெச்சவன் ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.சினிமாவுக்கு மொழி என்ற புண்ணாக்கு தேவையில்லை என்ற புரிதலே இல்லாம உளறிக் கொட்டுறாரு.
0........
உண்மை செய்தியை கொஞ்சம் நகைசுவை கலந்து சொன்ன அண்ணாமலை அவர்களுக்கு மிக்க நன்றி.
ஐயா முத்தமிழ் காவலர் கலைஞ்சரே வாய்ப்பு கிடைச்சிருந்தால், இந்தி நடிகையோடு நடித்திருப்பார். பேரன் நடித்ததை பெரிதாக்குகிறீர்களே.