Load Image
Advertisement

பிரிட்டனின் முதல் பிரதமராகும் ஹிந்து ரிஷி சுனக்

Tamil News
ADVERTISEMENT
லண்டன் : பிரிட்டனின் பிரதமராக, இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், 42, போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ஐரோப்பிய நாடானபிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும்பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும்.இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள்வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார்.

ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின.
Latest Tamil News

இதனால், 45 நாட்கள்பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கட்சியின் 1.70 லட்சம் பிரதிநிதிகள் ஓட்டளித்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பர்.இந்தத்தேர்தலில் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகிய இருவரின் பெயர்கள் முன்னிலையில்இருந்தன.இதற்கிடையே,பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையின் தலைவரும், பெண்
எம்.பி.,யுமானபென்னி மோர்டார்ட், தலைவர் பதவிக்குபோட்டியிடுவதாக அறிவித்தார்.


தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு சில மணி நேரமே இருந்த நிலையில், போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதையடுத்து, ரிஷி சுனக்குக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அவருக்கு, 178க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. பென்னி மோர்டார்ட்க்கு, 40க்கும் குறைவான எம்.பி.,க்களின் ஆதரவே உள்ளது.கட்சி விதிகளின்படி, குறைந்தபட்சம், 100 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பவரே, தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும்.


போதிய ஆதரவு இல்லாததால், பென்னி மோர்டார்ட் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.அவ்வாறு நிகழ்ந்தால், ரிஷி சுனக் போட்டியின்றி கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு இந்தியாவை பூர்வீகமாக உடையவருக்கு கிடைக்க உள்ளது, அங்கு வாழும் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரிட்டனில் வெள்ளையர் அல்லாத ஒருவர் முதல் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெருமையை பெறுகிறார்.போட்டி ஏற்பட்டால், அக்., 28ல் ஓட்டெடுப்பு நடக்கும். அதில், கட்சி பிரதிநிதிகள் ஓட்டளித்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பர்.

ஆப்ரிக்கா டூ பிரிட்டன்ரிஷி சுனக் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் 1980, மே 12 பிறந்தார் இவரது தந்தை கென்யாவை சேர்ந்தவர். தாய் தான்சானியாவை சேர்ந்தவர். இவரது தந்தைவழி தாத்தா - பாட்டி பஞ்சாபில் பிறந்து கிழக்கு ஆப்ரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் பிரிட்டன் சென்றனர்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (148)

 • J. Vensuslaus - Nagercoil,இந்தியா

  "முதல் இந்து" என்பதைவிட முதல் "இந்திய வம்சாவழி" என்று சொல்லலாம்.

 • Sivagiri - chennai,இந்தியா

  அவர் அய்யர் அல்ல - பொற்கொல்லர் / மண்ணின் மைந்தர் - என்பது செய்தி - - மனைவி வழிதான் அய்யர் . . .

 • DVRR - Kolkata,இந்தியா

  இது தான் இவர் விக்கிப்பீடியா நிலவரம் Rishi Sunak was born on 12 May 1980 in Southampton, Hampshire,to African-born Hindu parents of Indian Punjabi descent, Yashvir and Usha Sunak. He is the eldest of three siblings. His father was born and raised in the Colony and Protectorate of Kenya (present-day Kenya), while his mother was born in Tanganyika (which later became part of Tanzania). His grandfathers were born in Punjab province, British India, and migrated from East Africa with their families to the U.K. in the 1960s. His paternal grandfather, Ramdas Sunak, was from Gujranwala (in present-day Pakistan) and moved to Nairobi in 1935 to work as a clerk, where he was joined by his wife Suhag Rani Sunak from Delhi in 1937. His maternal grandfather, Raghubir Sain Berry MBE, worked in Tanganyika as a tax official, and had an arranged marriage with 16-year-old Tanganyika-born Sraksha, with whom he had three children, and the family moved to the U.K. in 1966, funded by Sraksha selling her wedding jewellery.In Britain, Raghubir Berry joined the Inland Revenue, and as a collector, was appointed a Member of the Order of the British Empire (MBE) in the 1988 Birthday Honours list. Yashvir was a general practitioner, and Usha was a pharmacist, who ran a local pharmacy. Rishi Sunak attended Stroud School, a preparatory school in Romsey, and Winchester College, a boys' independent boarding school, where he was head boy. He was a waiter at a curry house in Southampton during his summer holidays. He read Philosophy, Politics and Economics (PPE) at Lincoln College, Oxford, graduating with a first in 2001. During his time at university, he undertook an internship at Conservative Campaign Headquarters. In 2006, he gained an MBA from Stanford University, where he was a Fulbright scholar. Business career Rishi Sunak worked as an analyst for the investment bank Goldman Sachs between 2001 and 2004. He then worked for hedge fund management firm the Children's Investment Fund Management, becoming a partner in September 2006. He left in November 2009 to join former colleagues in California at a new hedge fund firm, Theleme Partners, which launched in October 2010 with $700 million under management. At both hedge funds, his boss was Patrick Degorce. He was also a director of the investment firm Catamaran Ventures, owned by his father-in-law, the Indian businessman N. R. Narayana Murthy between 2013 and 2015

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  //////

 • karupanasamy - chennai,இந்தியா

  ரிஷி சார் சுபவீ என்னும் திருடனின் மகன் அங்கே இருக்கிறான் அவருடைய விசாவை கான்சல் செய்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்