சங்க மாநில தலைவர் என்.நாராயணன் கூறி உள்ளதாவது: ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து, ஒட்டுமொத்த பிராமண சமூகத்தின் கருத்து என எண்ணுவது, பகுத்தறிவுக்கு உகந்ததா?
ஓர் இனத்திற்கு எதிராக வன்முறையை துாண்டுவதாக அமைந்துள்ள சுப.வீரபாண்டியனின் செயல்பாடு நடுநிலையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, 1967, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி, 'பூணுாலை கையில் பிடித்து கொண்டு தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள்' என்று பாடுபட்டு, தி.மு.க., முதன் முதலில் ஆட்சியில் அமருவதற்கு பூணுால் வெளியே வந்தததை மறுக்க முடியுமா?
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்ற பூணுால் அணிந்துள்ள பிரமாணர், தி.மு.க.,விற்கு வியூகம் அமைத்து கொடுத்து அக்கட்சியை வெற்றி பெற செய்த போதும், பூணுால் வெளியே வந்தததை மறக்கத் தான் முடியுமா?
இந்த உண்மைகள் எல்லாம் தி.மு.க.,வினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆட்சியில் உள்ள தி.மு.க.,வை காக்காய் பிடித்து இயக்கம் நடத்துவோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
பூணுால் தொன்று தொட்டு வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. தேவைப்படும் தருணங்களில் எல்லாம் தொடர்ந்து வெளிவரும்.
பூணுால் அறுப்பு மற்றும் இனப்படுகொலை போன்ற பிரசாரங்களை புறம்தள்ளி, தமிழக மக்களுக்கு தன் கடமைகளையும், சேவைகளையும் தொடர்ந்து பெருந்தன்மையாக செய்து வரும் பிராமண சமூகம் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவர்.
சுப.வீரபாண்டியனின் அநாகரிக மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைத்துள்ள குழுக்களில் இருந்து அவரை முதல்வர் கத்தரித்து விட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (73)
கோவில் சமீபத்தில் குண்டு வெடித்ததே.... அதில் வருபவர்களை, (அ)சுபவீ, பெயர் மட்டும் சொல்லி பேசுவாரா எல்லை, சார்ந்த சமூகம் பேரையும் சொல்லி கூப்பிடுவாரா? பெயரில் மட்டும் வீரம் இருந்தால் பத்தாது தாத்தா
அறிவாலயத்தில் ஓசி சோறு உண்பவர்கள் பேசுவதை பெரிதுபடுத்த வேண்டாம். சட்ட ஒழுங்கு பிரச்னையை திசை திருப்ப நடக்கும் நாடகம் இது. குரைக்கும் நாய் கடிக்காது.
தேர்தல் நேரத்தில் கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே இருந்தால் இப்படித்தான் இருக்கும், எல்லோருமே வீதிக்கு வந்து போராடும்போது ஊரோடு சேர்ந்து வீதிக்கு வந்து போராடி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து, ஏட்டிக்கு போட்டியில் ஈடுபட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும், அன்றுபோல் இன்று உலகம் இல்லை,எல்லாமேமாறிவிட்டது , பலரது குடும்பங்கள் சமுதாயத்தில் இரண்டறக்கலந்து விட்டது, அந்த குடும்பங்களும் சேர்ந்து தவறுக்கு எதிராக கூக்குரல் இடவேண்டிய நேரம், வாயுள்ள பிள்ளை பிழைக்கும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு . வந்தே மாதரம்
பூணூல் போட்டிருக்கிறவரிடம் தலை நிமிர்ந்து பேசும் வலிமை, எத்தனை பூணூல் போடாத இந்துக்களிடம் இருக்கிறது.
பிராமணர்கள் ஏன் இவர் மேல் வழக்கு தொடருவதில்லை