ADVERTISEMENT
மெல்போர்ன்: 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர் -12' சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 'சூப்பர்-12' சுற்றில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று (அக்.,23) மெல்போர்னில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அந்த அணியின் இப்திகர் அகமது 51 ரன்களும், ஷன் மசூத் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் 160 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ராகுல், ரோகித் துவக்கம் தந்தனர். இருவரும் தலா 4 ரன்களில் வெளியேறினர். சூர்யகுமார் யாதவ், (15), அக்சர் படேல் (2) என 31 ரன்களுக்குள் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் விராட் கோஹ்லி உடன் ஹர்த்திக் பாண்ட்யா கூட்டணி அமைத்தார். இருவரும் பாக்., பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் பாண்ட்யா (40) அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (2) ரன்னில் ஏமாற்றினார். விராட் கோஹ்லி சிக்சர் அடித்து வெற்றிக்கு பெரிதும் போராட, கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 எடுத்து ‛திரில்' வெற்றிப் பெற்றது. விராட் கோஹ்லி 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு வித்திட்டார்.
வாசகர் கருத்து (22)
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். கோலியும் அம்பயரும் இல்லைன்னா கதை கந்தல் ஆகியிருக்கும். பார்த்து விளையாடுங்க சகோதரர்களே.
Good wins over Evil. HappyDeepvali
விராட் கோலியின் சிறப்பான பேட்டிங்கில் இது மிகச்சிறந்த ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது இந்திய அணி உலக கோப்பை வெல்ல வாழ்த்துக்கள்
அட்டகாசம் அசத்தல் அனைத்தும் நம் அணியிடம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பாகிஸ்தானை வீழ்த்தி அடித்து நொறுக்கிய இந்தியா அந்த மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுவோம்....வெடிகளை போட்டு கொண்டாடி மகிழ்வோம்.