ADVERTISEMENT
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது.
எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம்.

பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும். விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்று விட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தினமலர் ஆசிரியர் குழுமத்திற்கு, இஸ்ரோ தலைவர் விஞ்ஜானி - சயின்டிஸ்ட் - திரு சோம்நாத் என்று குறிப்பிட்டால் இதைப் பார்க்கின்ற, படிக்கின்ற மாணவமணிகளுக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். அன்னாருக்கும்ம் உத்வேகம் பிறக்கும் , நன்றி, வணக்கும்.