

வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என்பதும் நான்கு பேருக்கு அந்த கார் கைமாறி இருப்பதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவை நகரில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் டிஜிபி பேட்டி :
சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சிலிண்டர் வெடித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் இருந்தவர் யார் என்று இன்னும் அடையாளம் காண முடியவில்லை. கோயில் அருகே நடந்திருப்பதால் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். விசாரணையை தற்போதுதான் துவக்கி இருக்கிறோம். முழு விசாரணைக்குப்பின்னர் அனைத்து விவரங்களையும் தெரிவிப்போம் என்றார்.
டிஜிபி ஆய்வு
கோவையில் கார் வெடித்த இடத்திற்கு நேரில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். அவருடன் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பிறகு அவர் கூறுகையில், காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக 6 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றன. குண்டுவெடிப்பு தடுப்பு பிரிவு அதிகாரிகள், கமாண்டோ பிரிவு அதிகாரிகளும் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தடயவியல் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இரண்டு சிலிண்டர்களில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. எங்கு வாங்கப்பட்டது எனவும் விசாரிக்கிறோம்.
காரின் தற்போதைய உரிமையாளர், அதற்கு முந்தைய உரிமையாளர் யார் என்பதும் குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கு முன்பு காரை வைத்திருந்தவர்களிடமும் விசாரணை நடக்கிறது. எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
சம்பவ இடத்திலிருந்து வெடித்து சிதறிய காரின் பாகங்கள் போலீஸ் வாகன மூலம் கொண்டு செல்லப்பட்டன
வாசகர் கருத்து (50)
இதைவிட ஒரு கீழ்த்தரமான சம்பவத்தை இலவசத்தை பெற்று தின்று உடல் வளர்க்கும் மக்கள் செய்ய முடியுமா? மேலும் மேலும் அவர்களுக்கு ஊட்டி வளருங்க மன்னரே , தமிழன் தலையில் ஏற்கனவே ஏழு லட்சம் கடன் . இன்னமும் ஊட்டி வளருங்க
முதலில் மத்திய அரசு இந்த பிஜிபி சைலேந்திரபாபுவை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
😀😀😀யார் வெடி வைத்ததுன்னு சொன்னா இவர் கண்டுபிடிச்சிடுவார் 🤣😀
ஹிந்திக்களிடம் திமிராகப் பேசினாலும், முஸ்லீமிடம் நீங்கள் கோழையென்பதை வழிந்து வெளிப்படுத்துவது, அழகோ அழகு...
குண்டு வெடிப்புச்சம்பவத்தை பூசி மெழுகுவது மகா கேவலம்.... விடியல் அரசில் செயல்பாடு சூப்பரோ சூப்பர்.