ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது என சபாநாயகர் செல்வம் பேசினார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு விழாவில் சபாநாயகர் செல்வம் பேசியதாவது:
பிரதமர் மோடி ஏழைகளுக்கானவர். முதல் கட்டமாக இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளார். சுய தொழில் துவங்க வங்கி மூலம் கடனுதவி வழங்கி வருகிறார்.
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தினால் கூட இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. யாரும் பின்பக்கம் வழியாக வேலைக்குவராமல் நேரடியாக வேலைக்கு வருகின்றனர். பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியாவை முதல் இடத்திற்கு முன்னேற்ற பிரதமர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.