Load Image
Advertisement

புலம்பிய ஸ்டாலின்: திமுக.,வை கையாள பா.ஜ., திட்டம்

புதுடில்லி: தமிழக முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், சில அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு 'என்னால் சரியாக துாங்க முடியவில்லை' என ஆதங்கப்பட்டார். இது தமிழகம் முழுக்க பெரிதாக பேசப்பட்டதோடு சமூக வலைதளங்களில் அதிக அளவில் 'மீம்ஸ்' வாயிலாகவும் கிண்டல் செய்யப்பட்டது.

Latest Tamil News


ஸ்டாலின் இப்படி மனது உடைந்து பேசியது, டில்லி அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரம் பா.ஜ., அமைச்சர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தமிழக முதல்வர் அனைத்து அமைச்சர்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருந்தோம்' என மத்திய அமைச்சர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Latest Tamil News
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு படி மேலே போய், ஒரு தி.மு.க., - எம்.பி.,யிடம் வெளிப்படையாக 'உங்கள் தலைவர் ஏன் இப்படி வெறுத்துப் போய் பேசியுள்ளார்; கட்சியில் என்ன பிரச்னை' என கேட்டாராம். அந்த எம்.பி., தெரியவில்லை என மழுப்பலாக பதில் சொன்னாராம்.

முதல்வரின் மனநிலைக்கு என்ன காரணம் என உளவுத்துறையிடம் விசாரிக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக சொல்லப் படுகிறது. கலகலத்துப் போயுள்ள தி.மு.க.,வை எப்படி கையாள வேண்டும் என பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு வருகிறதாம்.


வாசகர் கருத்து (52)

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    தமிழகத்தை கையாள்வது இருக்கட்டும்.. இருக்கும் மற்றவற்றையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள்...குஜராத்திலேயே பாஜகவிற்கு எதிரான கூக்குரல்கள் ஆரம்பித்துவிட்டது....

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    அன்று மேயராக இருந்த அனுபவம் உண்டு என்றால், அன்று கருணாநிதி இருந்தார். ஏதும் ஏடாகூடமாக போய்விடாமல் அவர் பாதுகாத்தார். ஆனால் இன்று அந்த அப்பா இல்லை. விஷயங்களை கையாள தெரியவில்லை, மந்திரி சபையில் பாதிபேர் முதல்வரை விட கட்சியில் மூத்தவர்கள். அவர்களை கொஞ்சம் நகர்ந்து உட்காருங்கள் என்றுகூட சொல்ல முடியாது. அப்பாவுக்கு பிறகு பிள்ளை என்று முதல்வரானால் இதுதான் கதி.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    பெரிய பதவிக்கு ,தன்னை விட அனுபவம் வாய்ந்தவர்களை பின் தள்ளி ,நாம் அட்டூழியமாக வந்தால்,இப்படி தான் ஆகும்டா தம்பி.

  • Kumar - Madurai,இந்தியா

    மதுரையில் ஒரு மந்திரி தன் கட்சி மேயரை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுகிறார்.ஆனால் சுடலையால் ஒரு இருநூறு ஓவாய் ஊபியைகூட ஒன்றும் செய்யஇயலாது.பாவம்.

  • விசு அய்யர் - Chennai ,இந்தியா

    ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்