ADVERTISEMENT
ஆண்டிபட்டி;முழு கொள்ளளவான, 71 அடி நீர்மட்டத்தை எட்டி, 14 ஆண்டுகளுக்கு பின் நேற்று மதியம், 3:00 மணிக்கு வைகை அணை மீண்டும் நிரம்பியது.
தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால், வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் வாயிலாக நீர் வரத்து தொடர்கிறது.
அக்., 17 இரவு, 7.00 மணிக்கு அணை நீர்மட்டம், 70.01 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அப்போது வினாடிக்கு, 7,500 கன அடி வீதம் அணைக்கு வந்த நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
நேற்று மதியம், 3:00 மணிக்கு அணை நீர்மட்டம் முழு அளவான, 71 அடியை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு, 1,817 கன அடி வீதம் வரும் நீர் முழுதும், ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மழையால் நீர்வரத்து உயரும் பட்சத்தில் அணையில் இருந்து முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் கூடுதலான நீர் திறக்கப்படும் சூழல் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அனைத்து கண்மாய்களுக்கும் வயல்களுக்கு செல்லும் வாய்க்கால் வரை தூர்வாரப்பட்டதா, இதற்கு பொறுப்புள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அமைச்சர்கள் விளம்பரத்தை முன்னிறுத்தி காலமும் பணமும் விரயப்படுத்துவதை தவிர்த்து ஆக்கபூர்வமாக மக்களின் சேவகர்கள் என்பதை மனதில் வைத்து நாட்டின் நலன்கருதி செயல்பட வேண்டும். வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.