ADVERTISEMENT
சூரத்: குஜராத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படுவதற்கு பதில் போலீசார் ரோஜா பூ கொடுப்பார்கள் என அம்மாநில உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
சூரத் நகரில், 'பாதுகாப்பான தீபாவளி, பாதுகாப்பான நகரம்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், முதல்வர் அறிவுரைப்படி முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்.21 முதல் அக்.,27 நள்ளிரவு வரை, மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்கள். ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல் என போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்காமல் ரோஜா பூ கொடுத்து வாழ்த்துவார்கள்.

பண்டிகை காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அபராதம் கட்டுவதை விட சின்ன சின்ன பொருட்களை வாங்க மக்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதால், மக்களின் நலன் கருதி இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. இதனால், யாரும் விதிகளை மீறலாம் என நினைக்காமல், பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தீபாவளிக்கு பொருட்கள் வாங்க மக்கள் அதிகம் பேர் வெளியே வருவதால், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
வாசகர் கருத்து (18)
தமிழகத்தில் மக்களை பாதுக்காப்பதுபோல் புதிதாக போக்குவரத்துத்துறையில் கொள்ளை நாடகம் ஆரம்பித்துவிட்டது.
விபத்திற்குப் பின் மலர் வளையம் வைப்பதற்கு இந்த பூ பயன் படும்
இதிலென்ன ஆச்சரியம்? மதக் கலவரத்தில் படுகொலை,கூட்டு பலாத்காரம் செய்தவர்களையே விடுதலை செய்து,ஆரத்தி எடுத்து வணங்கும் மக்கள் உள்ள பாஜக ஆளும் மாநிலத்தில் இதெல்லாம் சாதாரண விஷயம்!
,,,,,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
……