ADVERTISEMENT
புதுடில்லி: 'இன்போசிஸ்' நிறுவனம், அதன் ஊழியர்கள், பிற நிறுவனங்களில் பகுதி நேரப் பணியாளர்களாக பணியாற்ற, பச்சைக்கொடி காட்டி உள்ளது.
ஊழியர்கள், மேனேஜர்களின் அனுமதியுடன், பகுதி நேரப் பணிகளில் ஈடுபடலாம் என்றும், அந்த வேலைகள் நிறுவனத்துக்கு போட்டியானதாக இருக்கக்கூடாது என்றும் இன்போசிஸ் தெரிவித்து உள்ளது. அத்துடன், பகுதி நேரப் பணிகளில் எவ்வாறு ஈடுபடலாம்; ஈடுபடக்கூடாது என, சுற்றறிக்கையையும் வழங்கி உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை குறித்து நிபுணர்கள் கூறுகையில், “இந்த நடவடிக்கை நிறுவனத்திற்கு பல சவால்களை எதிர்கொள்ள உதவக்கூடும். ஏனெனில், இது ஊழியர்கள் கூடுதல் வருவாய் பெற அனுமதிக்கிறது. “அத்துடன், சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஊழியர்களின் தொழில்நுட்ப ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைகிறது,”என தெரிவிக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், தங்களுக்கான ஓய்வு நேரத்தில், வேறு பணிகளில் ஈடுபட்டு வருவாய் ஈட்டும் 'மூன்லைட்டிங்' எனும் நடைமுறை, அண்மைக் காலமாக விவாதப் பொருளாகி உள்ளது. பல நிறுவனங்கள் இதற்கு ஆதரவளிக்க மறுத்ததுடன், அப்படி பணிகளில் ஈடுபட்டவர்களை வேலை நீக்கமும் செய்து வருகின்றன.
இன்போசிஸ் நிறுவனமும், மூன்லைட்டிங் நடைமுறையை ஆதரிக்கவில்லை. மேலும், ஓராண்டுக்கும் மேலாக இரட்டை பணிகளில் இருந்தவர்களை பணிநீக்கமும் செய்துள்ளது. இந்நிலையில், தற்போது மேனேஜர்களின் அனுமதியுடன், பகுதி நேரப் பணிபுரியலாம் என தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்து (16)
பல வேலையற்ற இளைஞர்களின் வேலையைப் பறிக்கிறார்கள் இந்த மூன்லைட்டுகள்.
திறமை உள்ளவன் வேலை செய்து சம்பாரிக்க தடை கூடாது. இல்லை எனில் அவர்கள் ஒரே நிறுவனம் இல் விருப்பம் இன்றி வேலை செய்ய நேரிடும். மேலும் கூடுதல் உழைப்பு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தங்களுடைய லேவாதேவி மற்றும் ரியல் எஸ்டேட் ப்ரோக்கிங் தொழிலில் காம்ப்படீஷன் அதிகரிக்கும் என்று ஜாக்கிட்டோ ஜியோ ஆசிரியப் பெருமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
வேலை செய்பவர்கள் இதன் ஆபத்தை உணர வேண்டும் - .....சம்பள உயர்வு கேள்வி குறி ஆகிவிடும் - கொடுத்த வேலையை சரியாக செய்ய விட்டால் உடனே வெளியேற்றப்படுவார்கள் - பொறுத்திருந்து பார்க்க வேண்டும் - அனால் இது நிரந்தர வேலை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சரிபடாது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
காசுக்கு எப்படி வேணும்னாலும் உழைச்சு சாவுங்க இது தான் Corporate மயிண்டு வாய்ஸ். employees பற்றி ஒரு போதும் கவலை யார்க்கும் இல்லை .